பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

103


தரித்தபோதிலும் இவரது “லீலாவதி"க்குச் சமானமாக அவைகள் வரவில்லை. எங்கள் சபையில் முதல் அங்கத்தின ராகிய இவர் பூண்ட வேடங்களிலெல்லாம் “லீலாவதி"யே மிகச் சிறந்ததென்பதற்கு ஐயமில்லை. இப்பொழுது வயதாகி ஸ்தூல சரீரமுடையவராய்க் கேசம் நரைத்தவராயிருக்கும் இவரைப்பார்க்கும் என் இளைய நண்பர்கள், இவரா ‘லீலாவதி'யாக நடித்தார் என்று ஆச்சரியப்படக்கூடும். அப்பொழுது மெல்லிய ரூபமுடையவராயிருந்தார். ஸ்திரீ பாவத்தை நன்றாயறிந்து முக்கியமாக “லீலாவதி"யின் குணத்தை ஆராய்ந்தறிந்து பார்த்தவர்கள் யாவரும், இந்த “லீலாவதி” வேஷம் இவருக்குத்தான் தகும் என்று புகழ்ந்தார்கள். சுருக்கிச் சொல்லுமிடத்து எங்கள் சபையிலும் இதர சபைகளிலும் பின் வந்த “லீலாவதி"களெல்லாம் இவரையே ஓர் உதாரணமாக வைத்துக்கொண்டு, இவர் நடித்தது போலவே நடிக்க வேண்டுமென்று முயன்றனர் என்பதற்குச் சிறிதும் ஐயமில்லை .

ஆயினும் சங்கீதத்தில் மாத்திரம் இவர் பெயரெடுக்கவில்லை; என்னைப் போல்தான், தாளத்தில் கொஞ்சம் குறையுள்ளவர். இந்த வேஷத்தில் இவருக்குப் பின் வந்த அ. கிருஷ்ணசாமி ஐயர் இவரைவிட எளிதில் சங்கீதத்தில் மேம்பட்டவர் என்பதற்குச் சந்தேகமில்லை. இந்தக் கிருஷ்ணசாமி ஐயருக்கும், பிறகு எங்கள் சபையில் “லீலாவதி” வேஷம் பூண்ட அநேகருக்கும், ஜெயராம் நாயகர் இந்த நாடகப் பாத்திரத்தை இப்படி நடிக்க வேண்டுமென்று கற்பித்திருக்கிறார்.

இந்நாடகத்தில் “சுலோசனா” வேடம் தரித்தவர் அ. சுப்பிரமணிய ஐயர். இவர் நடித்தது மொத்தத்தில் நன்றாகவேயிருந்தது என்பது வந்திருந்தவர்களுடைய அபிப்பிராயம். என்னுடைய அபிப்பிராயமும் அப்படியே. இவர் நடித்ததும் நன்றாயிருந்தது, பாட்டும் நன்றாயிருந்தது. எம். வை. ரங்கசாமி ஐயங்காரைப் போல் சங்கீதத்தில் பெயரெடுக்கவில்லை; இருந்தபோதிலும் இரண்டிலும் சுமாராகவிருந்தது என்று சபிகர்களுடைய நன்மதிப்பைப் பெற்றார். இந்த வேடத்தில் ஜெயராம் நாயகர் “லீலாவதி” வேஷம் இப்படித்தான் நடிக்க வேண்டுமென்று பின்