பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

நாடக மேடை நினைவுகள்


வந்தவர்களுக்கு ஓர் ஏற்பாட்டைத் தந்தது போல், இவர் தந்தார் என்று சொல்வதற்கில்லை. அப்பெருமை, எங்கள் சபையில் இந்த நாடகத்தை இரண்டாம் முறை போட்ட பொழுது “சுலோசனா” வேடம் பூண்ட, என் ஆருயிர் நண்பனான சி. ரங்கவடிவேலு முதலியாருக்கு உரித்தாயது.

ஹாஸ்ய பாகத்தில், எம். துரைசாமி ஐயங்கார் விசித்ர சர்மன் வேடம் பூண்டு, மிகவும் நன்றாய் நடித்தார்; இவருக்கென்றே இந்த நாடகப் பாத்திரம் எழுதப்பட்டதென்று முன்பே இதைப் படிப்பவர்களுக்குத் தெரிவித்திருக்கிறேன். இவர் “அவசரப்படேல்” காட்சியில் நடித்தது இடைவிடா நகைப்பை உண்டாக்கியது; வந்திருந்தவர்கள் எல்லோரும் விதூஷகன் வேஷம் இவருக்கு மிகவும் பொருத்தமானது என்று புகழ்ந்தனர். இவர் நான்கைந்து காட்சிகளில் நடித்து சபையோரைச் சந்தோஷிக்கச் செய்தபோதிலும், ஒரே காட்சியில் வந்த ராஜ கணபதி முதலியார் இவரைவிட நன்றாக நடித்தார் என்பது என் அபிப்பிராயம். ராஜகணபதி முதலியார், வழிப்போக்கனான “சாரங்கன்” வேடம் பூண்டார். அவருக்குப் பாடவே தெரியாது. பிறகு இந்நாடகத்தில் நடித்த அநேகம் சாரங்கர்கள், பல பாட்டுகள் பாடிய போதிலும் இவர், அன்றைத்தினம் ஒரு பாட்டும் பாடவில்லை. அதற்கு முக்கியமான காரணம், ஆமைக்கு எவ்வளவு சங்கீதப் பயிற்சியுண்டோ அவ்வளவு பயிற்சி இவருக்கும் சங்கீதத்தில் உண்டு என்பதே! இவரது வசனமெல்லாம் பத்து அல்லது பன்னிரண்டு வரிக்குமேல் இராது. இருந்தும் இவர் சாரங்கனாக வேடம் பூண்டு பாத்திரத்திற்குத் தக்கபடி நடித்தது மிகவும் சிலாகிக்கத் தக்கதாயிருந்தது. நடிக்கப்பட்ட நாடகங்களின் குணாகுணங்களை எடுத்துக் கூறுவதில் மிகவும் தேர்ச்சி பெற்ற என் பால்ய நண்பராகிய ஸ்ரீனிவாச ஐயங்கார், ஒரு முறை இந்த “லீலாவதி சுலோசனா” பிறகு நடந்தபொழுது, கதாநாயகி, கதாநாயகன், மற்றுமுள்ள முக்கியமான பாத்திரங்களை யெல்லாம் விட்டு, இந்த ராஜ கணபதி முதலியார் ‘சாரங்கனாக’ நடித்ததுதான் மிகவும் மெச்சத்தக்கதாயிருந்ததென, அக்காலத்தில் அச்சிடப்பட்ட “இந்தியன் ஸ்டேஜ்” என்னும் பத்திரிகையில் எழுதியுள்ளார்.

இதற்குக் கொஞ்ச நாளைக்கு முன்புதான் புதிதாய் எங்கள் சபையைச் சேர்ந்த அ. கிருஷ்ணசாமி ஐயர், காந்திமதி வேஷம்