பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

நாடக மேடை நினைவுகள்


தன் விரலில் ஏதோ ஒரு விஷத்தை இரகசியமாய் வைத்து, அதை குலோசனையறியாதபடி பாலில் கலக்கியதுபோல் நடித்துக் காட்டினார். அதைக் கண்டதும் எனக்கு ஆச்சரியமும் சந்தோஷமும் உண்டாயிற்று; இதுதான் சரியான முறை, இனி இப்படித்தான் செய்ய வேண்டுமென்று தீர்மானித்து அதுமுதல் இந்த நாடகத்தை நடித்த பொழுதெல்லாம் இம்மாதிரியாகவே நடித்து வந்திருக்கின்றோம். ஒரு விதத்தில் இந்த யுக்தி எனக்கு முன்பே தோன்றாமற் போயிற்றே என்று வெட்கப்பட்டேன். அன்றியும் இதனால் நான் இன்னொரு பெரும் நன்மை அடைந்தேன்.

நாடக ஆசிரியனாகிய எனக்கு எனது நாடகத்தைப்பற்றி எல்லாம் தெரியும் என்று நான் அடைந்திருந்த கர்வமானது பங்கப்பட்டு, மற்றவர்களிடமிருந்து, நான் எழுதிய நாடகங் களிலேயே நான் கற்க வேண்டிய விஷயங்கள் அனேகம் இருக்கக்கூடும் என்னும் புத்தி வந்தது. அது முதல் நான் எழுதிய நாடகங்களாயிருந்த போதிலும் அவற்றை மற்றவர்கள் நடிக்கும்போது, அதிலுள்ள நாடகப் பாத்திரங்கள் எப்படி நடிக்கிறார்கள் என்று கவனமாய்ப் பார்த்து வர வேண்டு மென்றும் புத்தியுண்டாயிற்று.

இக்கம்பெனியில், அன்று மற்றப் பாத்திரங்களாக நடித்தவர் களுடைய ஆக்டிங் எனக்குப் பிடிக்கவில்லை. “பஞ்சண்ணா” என்கிற செல்லப் பெயர் பெற்ற பஞ்சநாதராவ் என்பவர், விதூஷகனாகிய விசித்திரசர்மாவாக நடித்தது மாத்திரம் கொஞ்சம் சுமாராக இருந்தது. நாடகம் முடிவதற்கு வெகு நேரமாகியும் கடைசிவரையில் உட்கார்ந்து பார்த்துவிட்டுப் போனேன். நாம் எழுதிய நாடகத்தை ஜீவனத்திற்காக நாடகமாடுபவர்களும் ஆடினார்களே என்னும் சந்தோஷத்துடன் அன்றிரவு உறங்கினேன். இந்த நாடகத்தை அனேகம் கம்பெனியார்கள் பிறகு ஆடியிருக்கின்றனர். அதைப்பற்றி இன்னொரு சமயம் எழுதலாமென்றிருக்கிறேன்.

இந்நாடத்தை விட்டு விலகுமுன் இதை நான் அச்சிட்ட பொழுது, என் தந்தையின் அனுமதியின் மீது என் தாயாருடைய ஞாபகத்திற்கே இதை அர்ப்பணம் செய்தேன் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன். இதை அச்சிட்ட சில மாதங்களுக்குள் என் ‘அருமைத்’ தந்தையார் என் தாயாரிடம்