பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

99


போய்ச் சேர, பிறகு 1923ஆம் வருஷம் வரையில் நான் அச்சிட்ட நாடகங்களை யெல்லாம், நான் தினம் தொழுதுவரும் தெய்வங்களாகிய என் தந்தை தாயாருக்கே அர்ப்பணம் செய்திருக்கிறேன் என்கிற விஷயம், எனது நாடகங்களை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு எல்லாம் தெரிந்த விஷயமே. இனி எனது நான்காவது நாடகமாகிய “கள்வர் தலைவன்” என்னும் நாடகத்தை, நான் எழுதிய கதையை எனது நண்பர்களுக்குத் தெரிவிக்கிறேன்.

எட்டாம் அத்தியாயம்

ள்வர் தலைவன்’ என்பது நான் பிறகு எழுதிய நாடகமாகும். அது சோகரசமமைந்தது. ஆங்கிலேய பாஷையில், நாடக வகுப்பில் டிராஜடி (Tragedy) என்று சொல்லும் வகுப்பைச் சார்ந்தது. கதாநாயகன் முதலியோர் மரிக்க, கடைசியில் துக்ககரமாய் முடியும் நாடகத்திற்கு டிராஜடி என்று பெயர். சம்ஸ்கிருத பாஷையில் இப்படிப்பட்ட நாடகங்கள் கிடையா. அதற்கு முக்கியக் காரணம், நாடகமானது இடையில் எவ்வளவு சோகரசம் கலந்ததாயிருப் பினும், முடிவில் சந்தோஷமாய் முடிய வேண்டுமென்பது சம்ஸ்கிருத நாடக லட்சணங்களில் முக்கியமான தொன்றாம். தமிழ் பாஷையிலும் அதுவரையில் இவ்வாறு சோகமாய் முடியும் நாடகங்கள் இல்லையென்றே கூற வேண்டும். தமிழ் பாஷையில் நான் அறிந்தவரை, சோகமாய் முடியும் நாடகங்களில் இதுதான் முதலாம். இவ்வாறு இந்நாடகத்தை துக்ககரமான முடிவுடன் முடித்ததற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. அது கீழ்வருமாறு:- முன்பு கூறிய ‘லீலாவதிசுலோசனா’ என்னும் நாடகம் விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஆடப்பட்ட பொழுது, அதுவரையில் எங்கள் சபையில் அங்கத்தினராகச் சேராத என் பால்ய சிநேகிதராகிய ஸ்ரீனிவாச ஐயங்கார் மற்றவர்களைப் போல் அதைப் பார்க்க வந்தாராம். அது அப்பொழுது எனக்குத் தெரியாது. பிறகுதான் அறிந்தேன். அந் நாடகத்தைப் பார்த்த பிறகு எனது நண்பர் ஒரு பத்திரிகையில் (ஹிந்துப் பத்திரிகையில் என்று எனக்கு