பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

நாடக மேடை நினைவுகள்


தகப்பனார், அண்ணன்மார் முதலிய பந்துக்கள், என் மனைவி உட்பட, காசி யாத்திரைக்குப் போயிருந்தார்கள். நான் மாத்திரம் லா (Law) பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தபடியால், அவர்களுடன் போவதற்கில்லை. நான் தனியாக “பம்மல் ஹவுஸ்” என்னும் எங்கள் பங்களாவில் இருந்தேன். என் தகப்பனார் வண்டி, எங்கள் வண்டி இரண்டும் என் சுவாதீனத்தில் இருந்தன. காலை எழுந்தவுடன் ஒரு வண்டியைப் போட்டுக்கொண்டு எழும்பூரிலிருந்து பட்டணம் வந்து, சில ஆக்டர்களை அழைத்துக்கொண்டு, எங்கள் பங்களாவுக்குப் போய், அவர்களுக்கு ஒன்பது மணிவரை ஒத்திகை நடத்துவேன். பிறகு அவர்களை மறுபடி பட்டணத்துக்குக் கொண்டுவந்து விடுவேன். மத்யானம் என் லா பரீட்ச்சைக்காகப் படிப்பேன். சாயங்காலம் இன்னொரு வண்டியிலேறி, மற்ற ஆக்டர்களையெல்லாம் அவரவர்கள் வீட்டிலிருந்து அழைத்துக் கொண்டு, எங்கள் சபைக்குப்போய் அவர்களுடைய பாடங்களை ஒத்திகை செய்து, அவரவர்கள் வீட்டிற்குக் கொண்போய் விட்டுவிட்டு, இரவு ஒன்பது மணிக்கு நான் எழும்பூர் போய்ச் சேர்வேன். இம்மாதிரியாக ஒத்திகைகள் வெகு மும்முரமாக நடத்தி நாடகத்தைச் சித்தம் செய்தோம். ஓர் இரவு உடையுடன் ஒத்திகை போட்டுப் பார்த்த பிறகே, விக்டோரியா பப்ளிக் ஹாலில் நாடகமாடத் தினம் குறித்துக்கொண்டோம்.

நோட்டீசுகளையெல்லாம் முன்போலவே ஏராளமாய்ப் பிரச்சாரம் செய்து, விக்டோரியா ஹாலில் 1894 ஆம் வருஷம் மார்ச்சு மாதம் 31ஆம் தேதி நாடகத்தை நடத்தினோம். இந்நாடகத்திற்கு வேண்டிய பாட்டுகளையெல்லாம், முன்பு கோபித்துக் கொண்டு போன தாயுமானசாமி முதலியார், மறுபடியும் எங்களிடம் வந்து சேர்ந்து, தக்கபடி எழுதிக் கொடுத்தார். அப்பாட்டுகளையெல்லாம் கீதமஞ்சரி என்னும் பெயருடன் அச்சிட்டிருக்கும் பாட்டு புஸ்தகத்தில் காணலாம்.

இனி அன்றையத் தினம் நடந்த நாடகத்தைப்பற்றி விவரமாக எழுதுகிறேன்.

“கள்வர் தலைவன்” என்னும் இந் நாடகத்தைச் சரியாக ஒன்பது மணிக்கு ஆரம்பித்தோம். முடிவதற்குச் சற்றேறக்