பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

நாடக மேடை நினைவுகள்


பார்த்த பிறகு, எங்கள் சபையில் அங்கத்தினராகச் சேர்ந்தனர். இது ஒன்றே அந்த “லீலாவதி- சுலோசனா” என்னும் நாடகம் நன்றாகயிருந்ததென்பதற்குப் போதுமான அத்தாட்சியாம். இந்த நாகடத்தில்தான் நாடகத்தின் காலத்திற்குத் தக்கபடி, மேற்சொன்ன ஏற்பாடுகளைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து நாங்கள் செய்ய ஆரம்பித்தது. இதற்கு முக்கியக் காரணபூதராயிருந்தது எனது நண்பராகிய ஸ்ரீனிவாச ஐயங்காரே. அதற்கு முன்பாகச் சாதாரணமாக நாடக மேடைகளில் நடந்து வந்த ஆபாசத்தைச் சற்று விவரமாகக் குறித்தால்தான், எனது நண்பர்களுக்கு இவ்விஷயம் வெளியாகும்.

அக்காலத்தில் சில முக்கியமான காட்சிகளுக்குத் தவிர, மற்றக் காட்சிகளுக்கெல்லாம் இன்னின்ன திரையை விட வேண்டுமென்னும் நியமமே கிடையாதென்றே சொல்ல வேண்டும். நான் எனது கண்ணாரக்கண்ட ஒரு உதாரணத்தைக் கொடுக்கிறேன். “திரௌபதி வஸ்திராபஹரணம்” என்னும் நாடகத்தில் துரியோதன மகாராஜன் தன் மாமனாகிய சகுனியிடம் தான் பாண்டவர் சபையில் பட்ட அவமானத்தைச் சொல்லும் காட்சிக்கு ஒரு தெருப்படுதா விடப்பட்டிருந்தது! அத்தெருப் படுதாவில் சென்னை போஸ்ட் ஆபீசும் மின்சார வண்டிகள் போவதற்காக வேண்டிய இரும்புக் கம்பங்களும், தந்திகளும் வரையப்பட்டிருந்தது! நாடகம் நடந்த காலம் துவாபர யுக முடிவு; அன்றியும் வணங்காமுடி மன்னனும் அவன் மாமனாகிய சகுனிராஜனும் உட்கார்ந்து பேச, அந்த வீதியின் மத்தியிலிருந்ததுபோல், ஆஸ்டிரேலியா தேசத்தில் செய்யப்பட்ட இரண்டு பென்ட்வுட் (Bent Wood) நாற்காலிகள் போடப்பட்டிருந்தன! என்னடா, இப்படி துவாபர யுகத்தில் நடந்திருக்குமா? ராஜாதி ராஜனெனப் பெயர் பூண்ட துரியோதனன், சகுனியுடன் மந்திராலோசனை செய்யும் பொழுது, ஒரு வீதியில்தான் செய்வானா? அதுவும் சென்னப் பட்டணம் போஸ்ட் ஆபீசுக்கெதிராகவா? அவர்களுக்கு பென்ட் பிவுட் நாற்காலிகள் தவிர, உட்கார வேறு ஆசனங்க ளில்லையா? என்று இம்மாதிரியான கேள்விகளைக் கேட்பார், அக்காலம் அதிகமாக இலர். இப்படிப்பட்ட ஆபாசங்களையெல்லாம் தவிர்க்கவேண்டுமென்று கங்கணம் கட்டிக்