பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

115


கொண்டு, நாடகத்தின் காலத்திற்கும் காட்சிகளுக்கும் தக்கபடி அரங்க பூமியில் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று மன்றாடி, எனது நண்பர், இக் ‘கள்வர் தலைவன்’ எனும் நாடகத்திற்கு மிகுந்த சிரத்தையுடன் கஷ்டப்பட்டு ஏற்பாடுகள் செய்தார். அதற்கு முன் எங்கள் சபையிலும் மேற்சொன்ன படியான ஆபாசங்கள் பல இருந்தன; இப்பொழுதும், இக்குற்றமானது முற்றிலும் அற்றுப் போய் விட்டது என்று நான் சொல்லவில்லை. ஆயினும் தற்காலம் கூடிய மட்டும் இப்படிப்பட்ட ஆபாசமான விஷயங்கள் இராவண்ணம் பார்த்துக் கொள்கிறோம். நம் நாட்டிலுள்ள நாடகக் கம்பெனிகளிலும், இதர சபைகளிலும், இக்குற்றமானது முற்றிலும் களையப்பட்டால் மிகவும் நலமெனவெண்ணி, இவ்விஷயத்தைப்பற்றி, சற்று விவரமாய் எழுதலானேன். நாடக நிகழ்காலத்தை உணர்ந்து, அக்காலத்திற்கேற்றபடியும், காட்சிக்கு ஏற்றபடியும் ஏற்பாடுகள் செய்வது எக்காரணத் திலாவது கடின மாயிருந்தால், மேல் நாட்டாரும் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் செய்கிறபடி, வெறும் திரையொன்றை விடுவதே மேலாகும்.

இந்நாடகத்திற்காக ஸ்ரீனிவாச ஐயங்காரும், ஸ்ரீனிவாச பாய் என்பவரும் செய்த ஏற்பாடுகளைப்பற்றி இன்னொரு விஷயம் எடுத்துரைக்க விரும்புகிறேன். இந் நாடகத்திற்குச் செய்த மேற்கண்ட ஏற்பாடுகளெல்லாம் மிகவும் பொருத்த மானவையாயும், அழகாயும் இருந்தபோதிலும், அதற்காக அவர்கள் சபையின் பணத்தைச் செலவழித்த ரொக்கமெல்லாம் சுமார் ஏழரை ரூபாய் என்று எனக்குக் கவனமிருக்கிறது! ஆகவே நாடகங்களை நடத்த வேண்டுமென்று விரும்பும் எனது நண்பர்கள், இவ்வாறு செய்வதில் அதிக செலவு பிடிக்குமென்று பயப்பட வேண்டியதில்லை. நூற்றுக் கணக்காகக் செலவழித்துக் காட்சிகள் ஏற்பாடு செய்ய வேண்டிய நிமித்தமில்லை. காலத்திற்குத் தக்கபடி ஏற்பாடு செய்ய வேண்டுமென்பதுதான் முக்கியம் என்று அறிவார்களாக.

இக் “கள்வர் தலைவன்” நாடகம் அன்று நடித்தபொழுது முக்கியமாகப் பெயர் பெற்றவர்கள், சௌமாலினியாக நடித்த அ. கிருஷ்ணசாமி ஐயரும், பாலசூர்யனாக நடித்த எம். வை.