பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/133

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

நாடக மேடை நினைவுகள்


நேரிற்பார்த்த, அவரது அந்தரங்க சிநேகிதர்களில் ஒருவராகிய சப் ஜட்ஜ் வேலை செய்து பென்ஷன் வாங்கிக்கொண்ட, கனகசபை முதலியார் என்பவர், என் தகப்பனாருக்கு இந்த நாடகத்தையும், நான் அதில் நடித்த விதத்தையும் புகழ்ந்து நான்கு ஐந்து பக்கங்கள் எழுதியனுப்பினார். இந்தக் கடிதம் இன்னும் என்னிடம் பாதுகாத்து வரப்பட்டிருக்கிறது. காசி யாத்திரையிலிருந்து திரும்பி வந்த என் தகப்பனார் அதை என்னிடம் கொடுத்து, அந்த நாடகத்தை நான் பார்க்க வேண்டுமென்று வற்புறுத்தினார். ஒரு முறை ஆடிய நாடகத்தை மறுமுறை ஆடுவதா என்று என் அறியாமையால் மறுத்தேன். அவ்வளவுதான் அக்காலத்தில் நாடகங்களைப் பற்றி எனக்கிருந்த அறிவு; நல்ல நாடகமாயிருந்தால் பலர் பார்க்கும்படியாக அதைத் திருப்பித் திருப்பி ஆடவேண்டு மென்று என் தந்தையார் எவ்வளவு சொல்லியும் என் செவிக்கேறவில்லை. ஒரு நாடகமானது அடிக்கடி ஆடப்படுவதே அதற்குப் பெருமையென்பதை அப்பொழுது சற்றும் அறிந்திலன். இவ்வாறு என் மூடத்தனத்தினால் நான் பிடிவாத மாய் மறுக்கவே, என் தகப்பனார், அதைப்பற்றிப் பேசுவதை விட்டனர். பிறகு சில மாதங்களுக்குள், என் பூர்வ பாபவசத் தால், என் தந்தை ‘கான்சர்’ என்னும் தீராத நோயால் பீடிக்கப்பட்டார். வைத்தியர்கள் இது தீராத நோய், அவர் பிழைப்பது அரிது என்று எங்களுக்கு இரகசியமாகத் தெரிவித்தனர்; அவருக்கும் இவ்வியாதி நீங்கி நாம் பிழைப்பது கடினம் என்று தோன்றிவிட்டது. இப்படியிருக்கும் சமயத்தில், ஒருநாள் என் அருமைத் தந்தை “சம்பந்தம், நான் இறப்பதற்குள், உனது நாடகம் ஒன்றைப் பார்த்துவிட்டுத்தான் இறக்கவேண்டும்” என்று வற்புறுத்தினார். அப்பொழுது எனக்கு வந்த துக்கம் கொஞ்சம் அல்ல. நான் என் செய்வது? அவர் இருந்த இருப்பில், துக்ககரமான, அக் “கள்வர் தலைவன்” என்னும் நாடகத்தை அவர் முன் ஆட எனக்கு மனம் ஒப்பவில்லை! ஆயினும் எப்படியாவது கஷ்டப்பட்டு ஒரு நாடகத்தை அவர் பார்க்கும்படி செய்யவேண்டுமென்று தீர்மானித்தவனாய் ஒரு சனிக்கிழமை, மியூஜியம் (Museum) புஸ்தக சாலைக்குப் போனேன். அங்கு ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் “தி ஐ ஆப் லவ்” என்கிற (The Eye of Love)