பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/134

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

117


பெயர் கொண்ட, ஒரு சிறு நாடிகையைப் பார்த்தேன். இதைத் தமிழில் எழுதலாமாவென்று யோசித்துக்கொண்டே வீட்டிற்குத் திரும்பினேன். பிறகு இது மிகவும் சிறிதாயிருக்கிறது என்று அந்த எண்ணத்தை விட்டேன். (இதைப் பெரிதாக்கிக் காதலர் கண்கள் என்னும் நாடகமாகப் பல வருஷங்கள் கழித்து எழுதி முடித்தேன். அக்கதையை அப்புறம் எனது நண்பர்களுக்கு உரைக்கிறேன்.) வீட்டிற்குப் போனதும், மஹாபாரதம் ஒன்று என் மேஜையின் மீதிருந்தது. அதைத் திறந்து படித்து, பயாதியின் கதையை நாடகமாக எழுதலாமென்று தீர்மானித்தேன். இதை ஒரு வாரத்திற்குள் எழுதி, ஒத்திகைபோட்டு, நாடகமாக முடித்ததை வரிசைக்கிரமத்தில் பிறகு எழுதுகிறேன். இவ்விடம் இதைப்பற்றி எழுத வேண்டி வந்ததென்னவென்றால், மேற்கூறிய காரணங்களால் என் தந்தையார் அக் ‘கள்வர் தலைவன்’ என்னும் நாடகத்தைப் பார்க்க முடியாமற் போனதென்பதாம். இந்நாடகமானது பிறகு ஒருமுறை 1898ஆம் வருஷம் டிசம்பர் மாதத்தில் எங்கள் சபையாரால் ஆடப்பட்டது.

நான் முக்கியமாக இந்நாடகத்தை மறுபடியும் அடிக்கடி மற்ற நாடகங்ளைப் போல் நடத்தாததற்குக் காரணம், இதைப்பற்றி நான் நினைக்கும்போதெல்லாம், என் தந்தை இதைப் பார்ப்பதற்கு இல்லாமற் போச்சுதே என்று எனக்கு மன வருத்தம் உண்டாவதேயாம். 1898ஆம் வருஷத்திற்குப் பிறகு முப்பத்திரண்டு வருடங்கள் கழித்து 1930ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி, மறுபடியும் எங்கள் சபையார் இதை நடத்தினர். சோககரமாக முடியும் இரண்டு நண்பர்கள், சாரங்கதரன், அமலாதித்யன் முதலிய அநேக நாடகங்களை நான் நடத்தியிருக்கிறேன். ஆகவே இக் “கள்வர் தலைவன்” நாடகத்தைப் பன்முறை நடத்தாதது சோககரமாய் முடியும் நாடகங்களை ஆடக் கூடாது என்னும் காரணத்தினாலன்று.

இந் நாடகத்தை வேலுநாயர் பன்முறை நடத்தியிருக்கிறார். அன்றியும் மதுரை ஒரிஜினல் பாய்ஸ்கம்பெனியாரும் பலதரம் நடத்தியிருக்கின்றனர். இரண்டு மூன்று ஆமெட்டூர் (Ameteur) சபைகளும் இதை நடத்தி இருக்கின்றன. ஆயினும் இந் நாடகம் எனது மற்ற நாடகங்ளைப்போல் அவ்வளவு அதிகமாக ஆடப்