பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

நாடக மேடை நினைவுகள்


பற்றி நான் எழுத வேண்டியதைப் பன்முறை எழுதப் பிரயத் தனப்பட்டும், என் மனமும், கண்களும், கையும் சோர்ந்தவனாய், அங்ஙனம் செய்ய அசக்தனாயிருந்தேன். இன்றே திருவருளை முன்னிட்டு, என் மனத்தை ஒருவாறு திடம் செய்து கொண்டு எழுத ஆரம்பித்தேன். எல்லாம்வல்ல கடவுள், வான் இழந்த என்னுயிர் நேயனுக்குச் செய்ய வேண்டிய கடமையைப் பத்திலொரு பங்காவது செய்து முடிக்க எனக்கு மனோதிடமளிப்பாராக!

இந்த ஜன்மத்தில் ஈசன் தன் கருணையினால் எனக்களித்த பெரும் பேறுகள் மூன்றைச் சொல்லும்படியாக யாராவது என்னைக் கேட்பார்களாயின், க்ஷணமும் தாமதியாமல், என் தாய், என் தந்தை, எனது நண்பன் இம் மூன்றுதான் என்று பதில் உரைப்பேன். இதை வாசிக்கும் எனது இளைய நண்பர்களுள் சிலர், நாங்களிருவரும் எவ்வளவு அன்யோன்யமாய் ஏறக்குறைய இருபத்தெட்டு வருஷம் வாழ்ந்து வந்தோம் என்பதை அறிந்திருக்கலாம். அதை அறியாத மற்றவர்களுக்கு, ஷேக்ஸ்பியர் மஹாகவி, ‘ஆஸ் யு லைக் இட்’ (‘As you Like it’) என்னும் நாடகத்தில் இணைபிரியாத் தாயாதிகளாகிய, ராசலிண்ட, சிலியா என்பவர்களைப்பற்றி எழுதியதை இங்கு எழுத விரும்புகிறேன். அந்நாடகத்தில் முதல் அங்கம் மூன்றாவது காட்சியில் சிலியா, தங்களிரு வருடைய நட்பைப்பற்றிக் கூறும் பொழுது “ஒரே காலத்தில் நாங்கள் எப்பொழுதும் உறங்கினோம்; ஒரே காலத்தில் எழுந்திருந்தோம்; ஒரே காலத்தில் விளையாடினோம்; ஒரே காலத்தில் படித்தோம்; நாங்கள் எங்கு சென்ற போதிலும், ஒன்றை விட்டொன்று பிரியாத கின்னர மிதுனங்களைப்போல் ஜோடியாய்ப் பிரியாது சென்றோம்” என்று உரைத்தது எங்கள் நட்பை ஒருவாறு குறிக்கிறதெனக் கூறுவேன். இப்படிப்பட்ட நண்பனை இழந்த துக்கம், இப்போதைக்கு ஒன்பது வருஷங்களாகியும் மாறவில்லை . ஒரு சமயம் வந்தால்தான் அது மாறும்.

நாடக மேடை நினைவுகளைப்பற்றி எழுதுபவன், என் நண்பனைப்பற்றி இவ்வளவு அதிகமாக நான் எழுதுவானேன் என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கு நான் கொடுக்க வேண்டிய விடை என்னவென்றால், என் தாய் தந்தைய