பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

121


ருக்குப் பிறகு, நான் நாடக ஆசிரியனானதற்கும், ஏதோ நாடக மேடையில் கொஞ்சம் பெயர் பெற்றதற்கும், என் நண்பனே முக்கியக் காரணமென உறுதியாய் நம்புகிறேன் என்பதே.

இனி இத்தகைய நண்பனை எப்படி நான் முதல் முதல் சந்திக்கும்படி நேர்ந்தது என்கிற விஷயங்கள் எல்லாம் இனி விவரித்து எழுதுகிறேன்.

நான் நாடக ஆசிரியனாகிச் சிறிது பெயர் பெற்றதற்கு என் தாய் தந்தையர்களே முக்கியக் காரண பூதர்களென்று முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். 1895ஆம் வருஷம் முதல் 1923ஆம் வருஷம் வரையில் நாடக மேடையில் எனது மனைவியாக நடித்த, என் ஆருயிர் நண்பனாகிய சி. ரங்கவடிவேலு முதலியாரை நான் பெற்றதற்கும், என் தந்தையே ஒருவிதக் காரணமாயிருந்தார் என்று நான் கூற வேண்டும். “லீலாவதி-சுலோசனா” நாடகம் முடிந்ததும் எங்கள் சபையார் வழக்கம்போல் ஒரு வனபோஜன பார்ட்டி வைத்துக் கொண்டார்கள். அன்றிரவு என் தந்தையார், “கிருஸ்தவ கலாசாலை மாணாக்கர்கள் சமஸ்கிருதத்தில் சாகுந்தலம் என்னும் மஹாகவி காளிதாசர் இயற்றிய நாடகத்தை நடத்தப்போகிறார்கள். எனக்கு இரண்டு டிக்கட்டுகள் அனுப்பியிருக்கிறார்கள், நீ வருகிறாயா?” என்று கேட்டார். நான் வரமுடியா தென்று சொல்லிவிட்டேன். பிறகு மறுநாள் என்னைப் பார்த்பொழுது “நேற்றிரவு நீ என்னுடன் வராமற் போயினையே. நாடகம் நன்றாக யிருந்தது; முக்கியமாக ஒரு சிறுபிள்ளை ‘அனசூயா’ வேஷம் தரித்தது மிகவும் நன்றாயிருந்தது” என்று தெரிவித்தார். அவர் இவ்வளவு சிலாகித்துச் சொல்லும்படியான பிள்ளை யாண்டான் யாராயிருக்கலாம் என்று யோசித்தவனாய், அக்கலாசாலையில் அப்பொழுது படித்துக்கொண்டிருந்த, என் நண்பனாகிய எம்.வை. ரங்கசாமி ஐயங்காரை “அனசூயை பாத்திரம் ஆடியது யார்?” என்று கேட்டேன். அவர் “அனசூயையாக நடித்தது சி. ரங்கவடிவேலு என்னும் ஒரு முதலியார் பிள்ளை . எனக்கு நன்றாய்த் தெரியும். மிகவும் அழகாயிருப்பான்” என்று பதில் உரைத்தார். அதன்பேரில் “ஒருநாள் சபைக்கு உன்னுடன் அழைத்துக் கொண்டு வா பாப்போம்” என்று சொன்னேன். அதன் மீது ஒரு