பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

நாடக மேடை நினைவுகள்


ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம், சபைக்கு சி. ரங்கவடி வேலுவை அழைத்துக்கொண்டு வந்தார். இவ்வகையாக, ஏறக்குறைய 28 வருஷங்கள் அன்று முதல் இணைபிரியா திருந்த எனது ஆருயிர் நண்பனைச் சந்திக்க நேர்ந்தது தெய்வக்கடாக்ஷத்தினால்.

நான் அன்றைத்தினம் அவரைப் பார்த்தபொழுது, அவருக்குச் சுமார் 16 வயதிருக்கும். என்னைப்போலவே, அவ்வளவாக உயரமில்லை; மிகவும் சிறப்பாகவுமில்லை; மாநிறம் என்றே சொல்ல வேண்டும்; முதல் முதல் அவரது உருவத்தை நோக்கினபொழுது மிகவும் அழகாயிருப்பார் என்று புகழ்ந்தார்களே, இவ்வளவுதானா? என்று என் மனத்திற்பட்டது. பிறகு அவரது கண்களை நோக்கினேன்; அக்கண்கள் அச்சமயம் என் ஆவியைக் கவர்ந்தவர் இதை வாசிக்கும் எனது நண்பர்கள், ஏதோ இவன் தன் உயிர் நண்பனை வெறும் புகழ்ச்சியாகக் கூறுகிறான் என்று எண்ணாதிருக்கும்படியாகக் கேட்டுக் கொள்கிறேன். அவரது பதினாறாம் வயதில் அவருக்கிருந்த கண்களைப் போல, இவ்வுலகில் எந்த ஆடவனுடைய கண்களையும் நான் பார்த்ததில்லை; அவரை அந்த வயதில் பார்த்தவர்கள் நான் கூறியதன் உண்மையை ஒப்புக்கொள்வார்களென்று உறுதியாய் நம்புகிறேன். ஸ்ரீதத்தனுடைய கண்கள் முதலில் சுலோசனாவின் கண்களைச் சந்தித்த பொழுது, அவைகளுக்கு க்ஷணத்தில் ஈடுபட்டதாக நான் எழுதிய “லீலாவதிசுலோசனா” என்னும் நாடகத்தில் எழுதியுள்ளேன். அவ்வாறு நான் எழுதியது என் இயற்கை அறிவைக்கொண்டு, இப்படியிருக்கலாம் என்று ஊகித்து எழுதியதாகும். அவ்வுண்மையை நான் வாஸ்தவத்தில் அனுபவித்தது, எனது கண்கள் அன்று அவரது கண்களைச் சந்தித்த பொழுமேயாம். பிறகு நான் மெல்ல அவர் பக்கத்தில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தேன். நான் பத்து வார்த்தைகள் பேசினால், ஒரு வார்த்தை பதில் சொல்லுவார்; அவ்வளவு சங்கோசமுள்ள வராயிருந்தார். அச்சமயம் கொஞ்சம் கொஞ்சமாக அவரது சங்கோசத்தையெல்லாம் போக்கி, எங்கள் சபையில் அங்கத்தினராக அவரைச் சேரும்படி வற்புறுத்தினேன். அவரும் இசைந்தார். அன்று முதல் இறந்துபோன என்