பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/142

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

127


இப்பொழுது சில வருஷங்களாகத்தான், என் உத்தரவின்றி மற்றவர்கள் எனது நாடகங்களை ஆடக்கூடாதென்று கண்டிப்பாயிருக்கிறேன். அதற்குமுன் அவ்வளவு கண்டிப்பாயில்லை. ஆகவே அநேக சபையார் முன்பு என் உத்திரவில்லாமலே இதை நடித்திருகின்றனர் என்பதை நான் அறிவேன். சென்னை ராஜதானியிலுள்ள எல்லாத் தமிழ் நாடகச் சபைகளும் இந் நாடகத்தை நடத்தியிருக்கின்றனர் என்றே நான் கூறவேண்டும். அன்றியும் நாடகமாடுதலையே ஜீவனோபாயமாகக் கொண்ட பல நாடகக் கம்பெனிகள் இதை நடத்தியிருக்கின்றன. அவையடக்கத்தை விடுத்து வெளிப்படையாய்ச் சொல்லுமிடத்து, இதைப் படிக்காத தமிழ் நாடகாபிமானி ஒருவரும் இல்லையென்றே கூறுவேன். என் சொந்த அபிப்பிராயத்தை உரைக்குமிடத்து, இதற்குப் பிறகு, இதைவிடச்சிறந்த நாடகங்கள் பல எழுதியிருக்கிறேன் என்று நான் உறுதியாய் எண்ணியபோதிலும், இந்நாடகமே எனக்கு மிகவும் கீர்த்தியைக் கொடுத்ததென்று உரைத்திடல் வேண்டும். சில வருடங்களுக்கு முன் என் நண்பராகிய ஸ்ரீனிவாச ஐயங்கார், அதுவரையில் நான் எழுதிய நாடகங்களுக்குள் “லீலாவதி - சுலோசனையே” மிகச் சிறந்ததெனக் கூறியுள்ளார். மற்றெல்லா விஷயங்களிலும், அநேகமாக அவர் அபிப் பிராயத்தை நான் ஒப்புக்கொள்வது என் வழக்கமாயினும், இதில் மாத்திரம் அவரது அபிப்பிராயத்தை நான் ஒப்புக் கொள்ளவில்லை . “லீலாவதி-சுலோசனா” வைவிட, “மனோஹரன்” நாடகமே மேம்பட்டது என்பது என் கொள்கை. இந்நாடகமானது ஆறாம் பதிப்பை அடைந்திருக்கிறது. ஆகவே என் நாடகங்களை வாங்கி வாசிப்பவர்களுடைய அபிப்பிராயமும் என் அபிப்பிராயத்தை ஒத்திருக்கிறதென ஊகிக்க வேண்டியவனாயிருக்கிறேன்.

இந்நாடகத்தை நான் எழுதி முடிப்பதற்குமுன் எனக்கு இவ்வுலகில் நேரிட்ட தௌர்ப்பாக்கியங்களுக்குள், இரண்டாவது நேரிட்டது-என் அருமைத் தந்தையார் இவ்வுலகை நீத்து, என் அன்னையிடம் போய்ச் சேர்ந்தார். இதை வாசிக்கும் எனது நண்பர்கள் எனது சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமே யொழிய, என் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளலாகா