பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

நாடக மேடை நினைவுகள்


தெனும் கோட்பாடுடையவனாதலின், என் தந்தை இறந்ததனால் எனக்குண்டான துயரத்தைப்பற்றி இங்கு எழுதாது விடுக்கின்றேன்.

“மனோஹரன்” நாடகத்தின் கதையானது என் அருமைத் தந்தை உயிருடனிருக்கும் பொழுதே, என்னால் கற்பனை செய்யப்பட்டது. இந்நாடகத்தை வாசித்த அல்லது ஆடப்பட்டபொழுது பார்த்த என் நண்பர்களில் அநேகர் இக் கதையை எங்கிருந்து எடுத்தாய் என்று கேட்டிருக்கின்றனர். இன்னும் சிலர் உன்னுடைய சுய அனுபவத்தைக் கொண்டு இதை எழுதினையோ? என்று கேட்டிருக்கின்றனர். அநேகம் கிரந்த கர்த்தர்கள் தங்கள் சொந்த அனுபவங்களை, தாங்கள் எழுதும் நவீனங்களிலாவது அல்லது நாடகங்களிலாவது புனைந்து எழுதியிருக்கிறார்கள் என்பது உலகப் பிரசித்தமே. நானும் எனது நாடகங்களில் சிற்சில இடங்களில் என் சொந்த அனுபவத்தையாவது அல்லது எனது நண்பர்களின் அனுபவத்தையாவது புனைந்து எழுதியிருக்கிறேன் என்று ஒப்புக்கொள்ள வேண்டியதே. அதற்கு உதாரணமாக “லீலாவதி-சுலோசனை” யில் ரோஜாப்பூக் காட்சியை உதாரணமாக முன்பே கூறியிருக்கிறேன். அம்மாதிரியாகவே இந்த மனோஹரன் நாடகத்திலும் இரண்டொரு விஷயங்கள் இருக்கலாம். அவற்றைப் பிறகு எடுத்துக் கூறுகிறேன். இச்சந்தர்ப்பத்தில் நான் எடுத்துக்கூற வந்ததென்னவென்றால், மனோஹரன் நாடகமானது என் மனத்தினால் நிர்மாணம் செய்யப்பட்ட கட்டுரைக் கதையேயாம் என்பதே. என் சொந்த அனுபவங்களையே என் நாடகத்தில் எழுதுகிறேன் என்பது முற்றிலும் தவறான எண்ணமாகும். அவ்வாறு எண்ணுவது வாஸ்தவமாயின், நான் ஸ்ரீதத்தனாகவும், மனோஹரனாகவும், சுந்தராதித்யனாகவும், ஜெயபாலனாகவும், விஜயரங்கப் பிள்ளையாகவும், ராமச்சந்திர ஐயராகவும், ராஜசிம்மனாகவும், ரகுவீரனாவும், சத்ருஜித்தாகவும், ஜெயசிங்காகவும், சபாபதி முதலியாராகவும், சுப்பிரமணிய ஐயராகவும், இன்னும் நான் எழுதியுள்ள மற்ற நாடகங்களின் கதாநாயகர்கள் எத்தனைப் பெயர் உண்டோ , அத்தனைப் பெயர்களாகவும் நானிருக்க வேண்டும்-இவ்வாறு எண்ணுவது தவறென இதை வாசிப்பவர்