பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

129


களெல்லாம் கொஞ்சம் தீர்க்காலோசனை செய்வார்களாயின் ஸ்பஷ்டமாய் விளங்கும்.

ஒரு கிரந்த கர்த்தா தன் அனுபவங்களையே எழுதுகிறார் என்று எண்ணுபவர்கள், அக்கிரந்தகர்த்தா எழுதிய முக்கியமான பாத்திரங்களுடைய அனுபவம் மாத்திரமன்றி, அவர் எழுதும் எல்லாப் பாத்திரங்களின் அனுபவத்தையும் (ஸ்திரீ பாத்திரங்கள் உட்பட) அடைந்திருக்க வேண்டும் என்று ஒப்புக்கொள்ள வேண்டியவர்களாகிறார்கள்!

இந்தச் சந்தர்ப்பத்தில் இரண்டு வருஷங்களுக்கு முன்பாக “தாசிப் பெண்” என்னும் எனது நூதன நாடகமொன்றை அச்சிட்டபொழுது நடந்த ஒரு விருத்தாந்தத்தை இங்கு எழுதுகிறேன்.

அந்நாடகமானது அச்சிடப்பட்டபின் அதை வாசித்த எனது நண்பர்களுள் ஒருவர் “முதலியார் அவர்களுக்கு தாசிகள் விஷயமெல்லாம் நன்றாய்த் தெரியும் போலிருக்கிறது. அவ்விஷயங்களை எல்லாம் மிகவும் நுட்பமாய் அறிந்து எழுதியிருக்கிறார்” என்று ஏளனம் செய்தார். நான் உடனே “அப்படியாயின் உங்கள் நியாயப் பிரகாரம் நான் எழுதியது சரியென்று கூற உங்களுக்கும் அவர்கள் விஷயங்களெல்லாம் நன்றாய்த் தெரிந்திருக்க வேண்டுமே” என்று பதில் உரைத்திருக்கக்கூடும். ஆயினும், அவ்வாறு கூறியவர் என்னிலும் அதிக வயதுடையவராதல் பற்றி, அவ்வாறு எனக்குக் கூற இஷ்மில்லாது, பின் வரும் கதையைக் கூறினேன். “ஓர் ஊரில் ஓர் அரசன் இருந்தானாம். அந்த அரசனுக்கு ஆப்தரான ஒரு சன்யாசியும் அமைச்சனும் இருந்தார்களாம். அந்த மந்திரிக்கு அந்தச் சன்யாசியிடம் அவ்வளவு மனப்பொருத்தம் இல்லையாம். ஒரு நாள் அந்தச் சன்யாசி சிற்றின்ப விஷயத்தைப் பற்றி உதாரணம் எடுத்துக் கூற, அம்மந்திரி, ‘சன்யாசி அவர்களுக்குச் சிற்றின்பத்தில் அதிகப் பரீட்சையிருக்கிறாற் போலிருக்கிறது அந்த ருசி அறிந்திருக்க வேண்டும்!’ என்று ஏளனம் செய்ய, சன்யாசி அதைக் கவனியாதவர் போலிருந்து, சில தினங்கள் சென்ற பிறகு அரசன் எதிரில், துருப்பிடித்த ஒரு வெண்கலப் பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி, அதை ஒரு குழியில்