பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/146

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

121


பட்டதைப்பற்றி மிகவும் வருந்தி வெகுண்டெழுந்ததாக மிகவும் சாதுர்யமாகவும் அழகாகவும் கூறினார். அக்கதையில் இந்தப் பாகம் என் மனத்தை மிகவும் உருக்கியது. உடனே அக்கதையை நாடகமாக எழுதலாமா என்று அன்றிரவு யோசிக்க ஆரம்பித்தேன். அக்காலத்தில் ஏதாவது நல்ல பாட்டைக் கேட்டால்; இதை நமது சபையில் எந்த நாடகத்தில் உபயோகிக்கலாம்? ஏதாவது அழகிய பொருளைப் பார்த்தால், இதை நமது நாடக மேடையில் எந்தக் காட்சியில் உபயோகிக்கலாம்? யாராவது அழகிய சிறுவனைப் பார்த்தால் இவனை எப்படி நமது சபையில் அங்கத்தினனாகச் சேர்த்துக் கொள்ளலாம்? இவன் எந்த நாடகப் பாத்திரத்திற்கு உபயோகப் படுவான்? என்று இம்மாதிரியே எண்ணிக் கொண்டிருந்ததால், (இந்தப் பழக்கம் இன்னும் என்னைவிட்டு அகலவில்லையென்றே நான் கூறவேண்டும்) துருவ சரித்திரத்தை நாடகமாக எழுத வேண்டுமென்று என் மனத்தில் உதித்தது ஓர் ஆச்சரியமன்று. இப்படி நான் யோசித்துக் கொண்டிருக்கையில் அச்சரித்திரம் நாடகமாடுவதற்கு மிகவும் சிறியதாயிருக்கிறதென அந்த எண்ணத்தை விட்டேன்.

ஆயினும் அவன் தன் தாயாருக்கு நேரிட்ட வருத்தத்தைக் குறித்து வெகுண்டெழுந்த காட்சி, என் மனத்தில் உறுத்திக் கொண்டேயிருந்தது. திடீரென்று, இவ்வாறு அவமானம் செய்தவள், சிற்றன்னையாயிராது கேவலம் ஒரு வேசியாய் இருந்தால் அவனுக்கு இன்னும் எவ்வளவு கோபம் வரும் என்று தோன்றியது. உடனே ஒரு ராஜகுமாரனை அவன் தந்தை முன்னிலையில், அந்த அரசனது வைப்பாட்டி, வேசி மகனென வைதால் எப்படியிருக்குமென என் மனத்திற் பட்டது. அந்த ராஜகுமாரன் எவ்வாறு வெகுண்டெழுவான் என்று அக்காட்சியை என் மனத்தில் எண்ணிப் பார்த்தேன். இதுதான் ‘மனோஹரன்’ நாடகத்தின் கதை என் மனத்தில் உற்பவித்த தற்குக் காரணம். இனி படிப்படியாக இந் நாடகக் கதை விரிந்ததைச் சற்று விவரமாகக் கூறுகிறேன்.

அக கூறுகிறேன. மனோஹரன் தாயாரை, மிகுந்த உத்தம ஸ்திரீயாக்கினால் அவளை வேசியென ஒருத்தி வைவது, கேட்பவர்கள் மனத்திலெல்லாம் ஆத்திரத்தை உண்டுபண்ணுமென எண்ணி, நான் எழுதிய ஸ்திரீரத்னங்களுக்குள் எல்லாம் சிறந்தவர்களாக,