பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/149

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

நாடக மேடை நினைவுகள்


நாடகப் பிதாமகனான கிருஷ்ணமாச்சார்லு அவர்களுடைய நாடகத்தில் ஒரு விட புருஷனுக்குப் பெயராக இருந்தது. அப்பெயரை நான் கேட்டவுடன் இது நல்ல பெயராக இருக்கின்றது, இப் பெயரை விடபுருஷனுக்கு வைத்ததைவிட, ஒரு நல்ல உத்தம ராஜகுமாரனுக்கு வைத்தால் நலமாயிருக்கு மெனத் தோன்றியது. அப்பெயரையே இந்நாடத்திற்கும், இந்நாடகத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாயிருக்கும் ராஜகுமாரனுக்கும் வைத்தேன். ‘புருஷோத்தமன்’ ‘பத்மாவதி’ இப்பெயர்களைப் பற்றி முன்பே வரைந்துள்ளேன். விஜயாள் என்கிற பெயரைப்பற்றியும் எழுதியிருக்கிறேன். இந்த விஜயாள் என்ற பெயரைப்பற்றி இன்னொன்று எழுத விரும்புகிறேன்; சாதாரணமாக நான் நாடகங்கள் எழுதும் பொழுது, அதில் வரும் பாத்திரங்களின் பெயர்களை யெல்லாம் உரக்க உச்சரித்துப் பார்ப்பது வழக்கம். செவிக்கு எப்படி அவைகள் படுகின்றன என்று பரிசோதித்துப் பார்ப்பது என் வழக்கம். ஒரு கதா புருஷன் தன் நாயகியை ‘அலர்மேல் மங்கைத்தாயே’ அல்லது ‘கனகவல்லித் தாயாரம்மாளே!’ என்று கூப்பிடுவதென்றால், நாடகம் நடிக்கப்படும்போது நகைப்பையே உண்டாக்குமென்பது என் அபிப்பிராம். ஆகவே நாடகப் பாத்திரங்களுக்குப் பெயர் வைப்பதிலும் அழகிய பெயர்களை வைக்க வேண்டுமென்பது என் கொள்கை; ஆகவே விஜயாள் என்று அழைப்பது செவிக்கு இனிப்பா யிருப்பதனாலும், அந்நாடகப் பாத்திரம் ஒரு சிறு வயதுடைய பெண்மணியாயிருப்பதனாலும் அப் பெயரையிட்டேன். வசந்தசேனை என்கிற பெயர் ரவிவர்மா வரைந்த ஒரு தாசியின் படத்திலிருந்து எடுக்கப்பட்டது. வசந்தசேனையின் மைந்தன் ‘வசந்தன்’ என்று வரலாயிற்று.

ஒவ்வொரு நாடகத்திலும் ஏதாவது ஹாஸ்ய ரசம் இருக்க வேண்டுமென்று, சம்ஸ்கிருத நாடகங்களிலிருப்பதுபோல், ஒரு விதூஷக பாத்திரத்தை எழுதுவது அக்காலத்தில் எனக்கு வழக்கம். அவ்வழக்கப்படி ‘விகடன்’ என்னும் விதூஷகனை மனோஹரா நாடகத்தில் எழுதினேன். ‘வசந்தன்’ பைத்தியம் பிடித்தவனானபடியால் அவனுக்கு வைத்தியனாக அமிர்தகேசரியை நியமித்தேன். ரண வீரகேது எனும் சேனாதிபதியும், சத்யசீலன் எனும் மந்திரியும் வந்ததற்குக்