பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/151

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

நாடக மேடை நினைவுகள்


கிறேன். முதல் ஐந்து காட்சிகள் எழுதி முடிந்ததும் அவர் தேகவியோகமானார்; தகனக்கிரியை முடித்து மறுநாள் சஞ்சயனம் ஆனவுடன் மற்றக் காட்சிகளை எழுதத் தொடங்கினேன். இதற்கு முக்கியமான காரணம் என் துக்கத்தை யடைந்த மனத்தை இவ்விஷயத்தில் செலுத்துவதனால், அத்துக்கத்தை மறந்திருக்கும் பொருட்டே. அச்சமயம், காலஞ் சென்ற, என் பழைய நண்பராகிய ரகுநாத சாஸ்திரியார் என்பவர் என்னிடம் துக்கம் விசாரிக்க வந்தார். வந்தவர் நான் நாடகம் எழுதிக்கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, “என்ன சம்பந்தம் நீ துக்கத்தில் மூழ்கியிருப்பாயென்று எண்ணினேன். என்ன, நாடகம் எழுதிக்கொண்டிருக்கிறாயே!” என்று கேட்டார். “என் துக்கத்தை மறந்திருப்பதற்கு இதுதான் நான் கைகண்ட மார்க்கம். அன்றியும் நடந்ததைப்பற்றித் துக்கப்படுவதில் என்ன பிரயோஜனம்?” என்று கூறி, நான் எழுதிக்கொண்டிருந்த காட்சியை அவருக்கு வாசித்துக் காட்டினேன்; அக்காட்சி, இந்நாடகத்தில் இரண்டாம் அங்கம் இரண்டாம் காட்சியாம். அதற்குச் சாதாரணமாக “ஙப்போல் வளை” காட்சி என்று எங்கள் சபையின் அங்கத்தினர் வேடிக்கையாகப் பேர் வைத்திருக்கின்றனர். இந்த விஷயத்தை சற்று விவரமாய் இப்படி எழுதினதற்கு ஒரு காரணம் உண்டு; நான் ஸ்மால்காஸ் கோர்ட் ஜட்ஜாகயிருந்தபொழுது, சில வருஷங்களுக்கு முன், என் மனைவி, என் தௌர்பாக்கியத்தால் மடிந்த பொழுது, தகனக்கிரியை ஆனவுடன், கோர்ட்டுக்குப் போய் கோர்ட் கேசுகளை நடத்தினேன். அச்சமயம், எனது நண்பர்களில் பலர், இவன் என்ன கல் மனதுடையவனா யிருக்கிறான்; பெண்சாதி இறந்த தினம்கூடக் கோர்ட்டுக்கு வந்து கோர்ட்டில் விவஹாரம் நடத்துகிறானே! என்று என்னைப் பழித்ததாகக் கேள்விப்பட்டேன். இவ்வாறு நான் செய்ததற்கு நியாயம், இதற்கு முன் நான் குறிப்பிட்டதுதான்; உயிர் உள்ளவரையில், நம்மால் எவ்வளவு கஷ்டம் எடுத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவும் எடுத்துகொள்ள வேண்டியதுதான். உயிர் நீங்கினபின், பேதை மனிதனால் என்ன செய்ய முடியும்? நான் செய்தது தப்போ ஒப்போ என்று யோசிப்பவர்கள், மஹா பாரதத்தில், சுவர்க்காரோஹண பர்வத்தில் “புத்திமான்கள் இறந்தவர்களுக்காகத் துக்கப்பட