பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/153

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

நாடக மேடை நினைவுகள்


நாங்கள் எல்லாம் சாப்பிட்டுவிட்டு, வெற்றிலை போட்டுக் கொண்டிருந்த சமயம், ரங்கவடிவேலுவை, தான் கையில் வைத்துக்கொண்டிருந்த வெற்றிலைச் சுருள் ஒன்றை எனக்குக் கொடுக்கும்படி கேட்டேன். தனக்கு இயல்பாயுள்ள வெட்கத்தினால் அத்தனை பெயர் எதிரில் கொடுப்பதா என்று எண்ணி மறுத்தனர். ஆகட்டும், இதற்கா வெட்கப்படுகிறாய்? ஆயிரக்கணக்கான ஜனங்கள் எதிரில், உன்னை அங்ஙனம் செய்யும்படி செய்கிறேன் பார்! என்று மனத்தில் தீர்மானித்து, மனோஹரன் நாடகத்தில் மூன்றாவது அங்கத்தில் இரண்டாவது காட்சியில் (இதற்கு ஊஞ்சல் காட்சி என்று சாதாரணப்பெயர் உண்டு) விஜயாள் மனோஹரனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுப்பதாக எழுதினேன்! இது மேற்கண்ட வேடிக்கையான காரணத்தில் ஆரம்பமுடையதாயிருந்த போதிலும், நாடகத் திற்கு மிகவும் பொருந்தியதாய் ஜனங்களுக்கு மிகவும் சந்தோஷத்தைத் தரும்படியான ஒரு காட்சியாய் முடிந்தது.

நான் அக்காலத்தில் படித்த ஓர் ஆங்கில நாவலில் ஒரு ஸ்திரீ, தான் விரும்பும் காதலனுக்கு ஒரு கடிதமும், தான் வெறுக்கும் ஒரு புருஷனுக்கு ஒரு கடிதமும், ஏக காலத்தில் எழுதியபொழுது, அவைகளை அகஸ்மாத்தாய், மாறான கவர்களில் (Covers) போட்டனுப்பிவிட, பிறகு அதனால் பெருங்கஷ்டமனுபவித்ததாகப் படித்திருந்தேன்; இது அகஸ்மாத்தாய் நடந்திருக்க, ஒரு கெட்ட எண்ணமுடைய ஸ்திரீ, வேண்டுமென்று இரண்டு நிருபங்களை மாற்றிவிட்டால் அதனால் எவ்வளவு தீமை உண்டாக இடங்கொடுக்கும் என்று யோசித்து, வசந்தசேனை இம் மனோகரன் நாடகத்தில் பத்மாவதி தன் கணவனுக்கும் மந்திரிக்கும் எழுதிய நிருபங்களை, வேண்டுமென்று மாற்றச் செய்தேன். இக்காட்சியைப் பற்றி அநேக நண்பர்கள் அக்காலத்தில் காகிதங்களும் கவர்களும் ஏது? என்று என்னைக் கேட்டிருக்கின்றனர். அதற்கு பதில் என்ன வென்றால், காகிதங்களும் கவர்களும் அப்பொழுதில்லை; வாஸ்தவம் தான். ஆயினும் ஓலைச்சுருள்கள் அனுப்புவது புராதன வழக்கமாம். இவைகளைச் சுருட்டி, மேல் விலாசம் எழுதி ‘லகோடா’ என்கிற ஒரு சுருளில் அடக்குவது வழக்கமுண்டு என்பதேயாம்: இந்நாடகத்தை நடத்தும் எனது நண்பர்கள்