பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/154

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

139


இக்காட்சிகளில், காகிதத்திற்குப் பதிலாக ஓலைச் சுருள்களை உபயோகித்து அவைகளை ‘லகோடா’ என்னும் சுருள்களுக்குள் வைத்து, உபயோகிப்பார்களாக.

ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவியின் நாடகங்களைப் படித்த எனது நண்பர்கள், அவர், ஹாம்லெட், ஜுலியஸ் சீசர் முதலிய நாடகங்களில் உபயோகப்படுத்தியிருக்கும் அருவங்களினின்றும், இம்மனோஹரன் நாடகத்தில் ‘கேசரிவர்மன்’ அருவன் உதித்ததென எளிதில் அறியக்கூடும். அன்றியும் கொலை செய்யப்பட்டவர்கள் பிசாசாகத் தோன்றி தங்களைக் கொன்றவர்களை வருத்துகிறார்கள் என்பது நம்முடைய நாட்டில் சாதாரணமாக வழங்கும் அபிப்பிராயம்.

பத்மாவதிதேவி, புருஷோத்தமன் யுத்தத்திற்குச் செல்லும் பொழுதும் நேராகப் பாரேன் என்று, திரையிட்டு அத்திரைக்கு வெளியில் நின்று பார்க்கும்படியாகச் செய்த காட்சி, தேசிங்கு ராஜன் கதையில், தேசிங்கு யுத்தத்திற்குச் செல்லுமுன், தன் சொந்த மனைவியாயிருந்தபோதிலும், அவளது முகத்தைப் பார்ப்பதற்கில்லாமல், திரையை நடுவில் இட்டு அவளைப் பார்க்கும்படி நேர்ந்த சந்தர்ப்பத்திலிருந்து, என் மனத்தில் உதித்ததாகும்.

இம் மனோஹரன் நாடகத்திற்கு, உடையுடன் முழு இரவு ஒத்திகையானது எனது நண்பர் ஜெயராம் நாயகருடைய வீட்டில் நடந்தது. அதில் முக்கியமாக எனக்கு ஞாபகம் இருக்கும் விஷயம் என்னவென்றால், இந்நாடகத்தில் தற்காலத்தில் “இரும்புச் சங்கிலிக் காட்சி” என வழங்கி வரும் முக்கியமான காட்சியில், என் முழு தேக வலிவுடன் மிகுந்த உரத்த சப்தத்துடன் ஆக்டு செய்ததனால், அக்காட்சியின் முடிவில் சற்றேறக்குறைய வாஸ்தவத்திலேயே மூர்ச்சையாயினேன் என்பதே. அவ்வளவு நான் தேக சிரமப்பட்டது அனாவசியம் என்றே இப்பொழுது யோசிக்குமிடத்து எனக்குத் தோன்றுகிறது. அப்பொழுது அது தோன்றாமற் போயிற்று. அன்றியும் அச்சமயம் ஷேக்ஸ்பியர் மஹாகவி, ஹாம்லெட் வாயிலாக நாடகப் பாத்திரங்களுக்குச் செய்திருக்கும் உபதேசத்தை அறிந்தவனல்ல. அறிந்திருப்பேனாயின் அவ்வாறு என்னைக் கஷ்டத்திற்குள்ளாக்கிக் கொண்டிருக்க