பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

121


மனோஹரனுடைய முழு வல்லமையையும், நாம் கண்டோமில்லை; ஒரு கூற்றினைத்தான் நாம் பார்க்கிறோம் இதற்கே இப்படி இருக்கிறதே, இன்னும் அவனது முழு சக்தியையும் நாம் காண்போமாயின் எப்படி இருக்கும் என்று ஆச்சரியத்தை யுண்டுபண்ண வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. இப் புத்திமதியை இப் பாத்திரத்தை ஆட விரும்பும் என் இளைய நண்பர்களெல்லாம் சற்றுக் கவனிப்பார்களாக. நான் வாஸ்தவத்தில் மிகுந்த பலஹீனமுடையவன். என் யௌவனத்திலும், அவ்வயதுள்ள சிறுவர்களுடைய தேக பலத்திற்குக் குறைவான சக்தி யுடையவனாயிருந்தேன். ஆயினும் இக்காட்சியில் நான் நடிக்கும் பொழுது ஏதோ மிகுந்த பலமுடையவனாகத் தோற்றப்பட்டேன் என்று என் பால்ய நண்பர் ஸ்ரீனிவாச ஐயங்கார் பன்முறை கூறியுள்ளார். இல்லாத ஒன்றை இருப்பதுபோல் நடித்துக் காட்டுவதே நாடகத்திற்கு முக்கியமான ஒரு பெருமையும் அழகும் என்று அறிஞர் கூறுகின்றனர்.

இந் நாடகம் முக்கியமாக அநேகம் சபைகளாலும் நாடகக் கம்பெனியார்களாலும் நடிக்கப்பட்டிருப்பதால், அவற்றைப் பற்றி பிறகு எழுதலாமென்றிருக்கிறேன்.

இந்நாடகமானது எங்கள் சபையோரால் 1895ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஆடப்பட்டது. இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு, ஐந்துமணி நேரத்திற்குமேல் பிடித்தது என்பது என் ஞாபகம். டிக்கட்டு வசூலில் இருநூறு ரூபாய்தான் வந்தபோதிலும், வந்திருந்தவர்கள் அனைவரும் நன்றாயிருந்ததென மெச்சினர். நான் அறிந்த வரையில் ஆக்டர்களாகிய நாங்கள் நன்றாய் நடித்தோமென்பதே எங்கள் துணிவு. புருஷோத்தமனாக நடித்த ராஜரத்தின முதலியார் அந்நாடகப் பாத்திரத்திற்கு மிகுந்த அமைந்தபடி நடித்தார். இவர் எங்கள் சபையில் பூண்ட வேஷங்களிலெல்லாம் இதுதான் மிகவும் மேம்பட்டதென்பது என் அபிப்பிராயம். பிறகு வந்த அநேகம் புருஷோத்தமர்கள் பாடியிருக்கின்றனர்; இவர் இந்த வேடத்தில் ஒரு பாட்டும் பாடாமல், தன் வசனத்தினால் மாத்திரம் சபையோரைச் சந்தோஷிக்கச் செய்தது மெச்சத் தகுந்ததே. பத்மாவதியாக நடித்த அ. கிருஷ்ணசாமி ஐயர்; நடிப்பதற்கு