பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

நாடக மேடை நினைவுகள்


மிகவும் கஷ்டமான அப்பாத்திரத்தை மிகவும் நன்றாக நடித்தார் என்று எல்லோரும் ஒப்புக்கொண்டனர். இவரது சங்கீதமும் வசனமும் மிகவும் பொருத்தமானதாயிருந்ததென்பது என் தீர்மானம். முதல் அங்கம் நான்காம் காட்சியில், இறந்ததாகக் கருதிய மனோஹரனை, உயிருடன் மறுபடி காணப்பெற்ற பொழுது “காணக் கிடைத்ததேதோ மைந்தா” என்னும் பாட்டை கமாஸ் ராகத்தில் இவர் முப்பத்தேழு வருடங்களுக்கு முன் பாடியது இன்னும் என் மனத்தை விட்டகலவில்லை. அநேகம் பேர்கள் என்னுடன் பத்மாவதியாக நடித்திருக் கின்றனர்; ஆயினும், கேவலம் சங்கீதத்தை மாத்திரம் கருதுங்கால் இவரது பத்மாவதியே என் மனத்தை மிகவும் திருப்தி செய்தது என்று நான் சொல்ல வேண்டும். நான் ஒரு நாடகத்தில் மேடை மீது நடிக்கும் பொழுது, என்னுடன் நடிக்கும் ஆக்டர் எப்படி நடிக்கிறார்களென்று அறிவதற்கு, என்னிடம் ஓர் அளவைக் கருவியுண்டு. அதாவது, எனக்கு அவர்களுடன் நடிப்பதனால் உண்டாகும் சந்தோஷமே. இக்கருவியைக் கொண்டு அளந்திடுங்கால் கிருஷ்ணசாமி ஐயர் அன்று பத்மாவியாக நடித்தது மிகவும் சிறப்பினை வாய்ந்ததென்றே நான் கூறல் வேண்டும். எனது பழைய நண்பனாகிய இவர் அநேக ஸ்திரீ வேடங்களில் பெயர் பெற்றிருக்கின்றனர். அவற்றுளெல்லாம் இவரது பத்மாவதி மிகவும் சிறந்ததென்றே நான் சொல்ல வேண்டும்.

முன்பே கூறியபடி இந்நாடகத்தில்தான் எனது ஆருயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலு முதல் முதல் என் மனைவியாகிய விஜயாளாக நடித்தனர். இவர் வந்திருந்த சபையோரு டைய மனத்தை எளிதில் கவர்ந்தனர் என்பதற்கு ஐயமில்லை.

இந்த விஜயாள் பாத்திரம் நடிப்பதற்கு அவ்வளவு கஷ்ட மானதல்ல; இருந்த போதிலும் அதைச் சரியாக நடிப்பது சுலபமல்ல. இந்தப் பாத்திரம் சம்ஸ்கிருத நாடகத்தில் ‘முக்தா’ நாயகி வகுப்பைச் சார்ந்தது. இதை ‘ப்ரௌடை’ நாயகியாகக் கொஞ்சம் நடித்தாலும் ரசாபாசமாகும். வேண்டிய அளவிற்கு மிஞ்சாது நடிப்பதுதான் இதில் கஷ்டம். பாத்திரத்திற்கேற்றபடி, உலக வழக்கம் ஒன்றும் அறியாத பேதையைப்போல் எனது நண்பர் இதை மிகவும் சாதுர்யமாக நடித்தார். அன்றைத்தினம் இவர் நான்கே நான்கு பாட்டுகள்தான் பாடினார் என்பது