பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

143


என் ஞாபகம். அவைகளை மிகவும் ஒழுங்காய்ப் பாடிச் சபையை பிரமிக்கச் செய்தார். இவரது பாட்டைவிட இவரது வசனங்களே மிக்க நன்றாயிருந்ததென்பது என் துணிவு. சுருக்கிச் சொல்லுமிடத்து, இதன் பிறகு இம்மனோஹரன் நாடகத்தில் விஜயாள் வேடம் பூண்ட அனைவரும் இவர் ஆக்டு செய்ததையே ஓர் உதாரணமாகக்கொண்டு அதன்படி நடக்க முயன்றனர் என்றே இயம்பவேண்டும். இப்பொழுதும் இந்த நாடகப் பாத்திரம் ஆடும் பொழுது, ஏதாவது ஒரு காட்சியில் எப்படி நடிப்பது என்று சந்தேகம் வந்தால், “ரங்கவடிவேலு இதில் எப்படி நடித்தது?” என்றே கேட்பார்கள். எங்கள் சபையிலும் இதர சபைகளிலும் மற்றுமுள்ள நாடகக் கம்பெனிகளிலும், அநேகம் பெயர் (ஸ்திரீகள் உட்பட) இந்த விஜயாள் பாத்திரத்தை ஆடப் பார்த்திருக்கிறேன்; ஆயினும் உண்மையாய்ப் பட்சபாதமின்றி உரைத்திடுவதானால், இவருக்கு மேலாகவாவது இவருக்குச் சமானமாகவாவது ஒருவரும் நடித்ததில்லை என்றே நான் கூறவேண்டும். ஏதோ எனது நண்பனைப் பற்றி வெறும் புகழ்ச்சியாகக் கூறுகிறேன் என்று இதை வாசிக்கும் எனது நண்பர்கள் கருதாதிருக்கும்படி வேண்டிக் கொள்கிறேன். இவரைவிட ரூபலாவண்யமுடைய ஆக்டர்களை நான் தென்னிந்திய நாடக மேடையில் கண்டிருக்கிறேன்; இவரைவிடப் பதின்மடங்கு நன்றாய்ப் பாடும்படியான அநேக ஆக்டர்களது சங்கீதத்தைக் கேட்டிருக்கிறேன்; அன்றியும் இவர் ஆக்ட் செய்த இன்னும் சில பாத்திரங்களைவிட நன்றாய் ஆக்டு செய்தவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆயினும் இந்த விஜயாள் பாத்திரத்தில் இவருக்கு இணையாக நடித்தவர்கள் இல்லை யென்பதே என் முடிவான தீர்மானம். இவர் ஒவ்வொரு காட்சியிலும் என்னுடன் நடித்த பொழுது இப்படி இப்படி நடித்தார் என்பது என் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்திருக்கிறது. ஒன்றை மாத்திரம் உதாரணமாகக் கூறகிறேன். இந்நாடகத்தில் முதல் அங்கம் நான்காவது காட்சியில் ராஜப்பிரியன் பாண்டிய நாட்டிற்குச் சென்று வெற்றி பெற்றபொழுது, மனோஹரன் அங்கு ஒரு ஸ்திரீயை மணந்ததாக ஏளனம் செய்தக்கால், அதை ஏளனம் என்று அறியாத விஜயாள் ‘என்னபிராண நாதா?’ என்று கேட்கிறாள். சி. ரங்கவடிவேலு, நாடக மேடையில் அந்த இரண்டு சிறு