பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

145


கைகால்களைச் சுத்தம் செய்து கொண்டு, அதன் தெள்ளிய நீரை உண்பவனே அதன் சுகத்தை உண்மையில் அறிகிறான்; அங்ஙனமே ஒரு பெண்ணைப் பெற்ற தந்தை அவள் மேன்மையையறியான்; அவளது ரூபலாவண்யத்தையும் குணாதிசயங்களையும் அனுபவிக்கும் அவளது புருஷனே, அவற்றை உண்மையில் அறிகிறான்! அங்ஙனமே, ஒரு கிரந்த கர்த்தா, தான் எழுதுவதன் மகிமையை அறிவதில்லை; அதை ஆராய்ந்தறியும் அப்புஸ்தகத்தை வாசிப்பவனே, அதன் நுட்பங்ளை யெல்லாம் நன்றாயறிகிறான், என்பதே! மேற்சொன்னபடி நாடகங்களை எழுதும் நாங்கள் “ஏதோ எங்கள் மனத்திற்குத் தோன்றியபடி எழுதி விடுகிறோம். சில சமயங்களில் நாங்கள் உப்யோகிக்கும் பதங்களின் நுட்பங்களை நாங்களே அறிகிறதில்லை. புத்திசாலிகளான நடர்கள் அவற்றை அரங்கத்தில் நடிக்கும் பொழுதுதான், அவ்வார்த்தைகளில் அடங்கியிருக்கும் அனேக விஷயங்களை அறிகிறோம். இந்த “சரிதான் மாமா” என்னும் வார்த்தைகள் சொல்லப்படும் பொழுதெல்லாம் சபையிலுள்ளவர்கள் அன்று முதல் இன்றுவரை கரகோஷம் செய்யாத நாளில்லை: அப்படி அவர்கள் செய்யாவிட்டால், அது விஜயன் வேடம் பூணும் ஆக்டருடைய குற்றம் என்பதற்கு எள்ளளவும் சந்தேகமில்லை. இந்த விசேஷத்தை அவ்வார்த்தைகளுக்கு உண்டாக்கியவர் எனது நண்பராகிய சி.ரங்கவடிவேலுவே. அவருக்குப்பின் இந்த விஜயாள் பாத்திரத்தை நடிக்கும் ஆக்டர்களெல்லாம் அவர் காட்டிய வழி பற்றியே இதை நடத்தி வருகின்றனர் என்பதற்கு ஐயமில்லை.

இனி அன்றிரவு நடித்த வசந்தசேனைப் பாத்திரத்தைப் பற்றிக் கொஞ்சம் எழுதுகிறேன். இந்நாடகத்தில் நடிப்பதற்கு மிகவும் கஷ்டமான பாத்திரங்களில் இது ஒன்று. பத்மாவதி, விஜயாள் முதலிய உத்தம குணமுடைய ஸ்திரீவேஷங்களைப் பூணுபவர்கள், சபையோர்களைச் சந்தோஷிக்கச் செய்வது சுலபம். இப்படிப்பட்ட ஸ்திரீரத்னங்கள் இன்னலுக்குட்படுகிறார்களே யென்று நாடகம் பார்ப்பவர்களெல்லாம், அவர்கள் மீது பச்சாதாபம் கொள்கிறார்கள். வசந்தசேனை முதலிய துஷ்ட சாரிதமுடைய ஸ்திரீகள் நாடக மேடையின்மீது தோன்றும் பொழுதெல்லாம், இத்துஷ்டையா! என்று