பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/163

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

நாடக மேடை நினைவுகள்


அப்படியிருந்தும், பிறகு வந்த வசந்தர்களெல்லாம் இவருக்கு இணையாகமாட்டார்கள் என்றே நான் கூற வேண்டும். இவரிடம் ஒரு முக்கியமான நற்குணமுண்டு. அதாவது எழுதியிருப்பதற்குமேல், ஒரு வார்த்தை அதிகமாகவும் பேச மாட்டார், குறைவாகவும் பேச மாட்டார்; அன்றியும் இவருக்கேற்ற பாத்திரத்தை மாத்திரம் பொறுக்கி இவருக்குக் கொடுத்துவிட்டால், ஒரு முறை இப்படி நடிக்க வேண்டுமென்று காண்பித்தபின், மறுபடி ஒன்றும் சொல்ல வேண்டியதில்ல; அப்படியே கிரஹித்துக்கொள்வார். சில ஆக்டர்களுக்குப் பத்து முறை ஒரே விஷயத்தைத் திருப்பித் திருப்பிக் கற்பித்த போதிலும், நாடக தினத்தில் நாடக மேடை ஏறுமுன், “வாத்தியார், இந்த வரியை எப்படிச் சொல்வது, இன்னொரு முறை சொல்லிக் காட்டுங்கள்” என்று கேட்பவர்களுமிருக்கிறார்கள்; அப்படிப்பட்டவர்களில் இவர் ஒருவரன்று.

முதல் பாகம் முற்றிற்று