பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/182

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

167


ஜாக்கிரதையாக நடித்து, சபையிலுள்ள ரசிகர்களின் மனதைப் புண்படுத்தாதிருப்பார்களெனக் கோருகிறேன். அன்றியும் வசந்தன் வேடம் பூணுபவன் கறுப்பாயிருக்கவேண்டும்; பிறப்பிலேயே கறுப்பாயிருக்கும் ஆடவன் இவ்வேடம் பூண்டால் முகத்திற்கு வர்ணமே பூசலாகாது; ஒருக்கால் சிவப்பாயிருக்கும் ஆடவன் இவ்வேடம் பூண்டால் முகத்தையும், கை கால்களையும் கறுப்பாக்க வேண்டும்; இந்நாடகத்திலேயே இவன் கறுப்பு நிறமுடையவனாயிருக்கிறான் என்று குறிப்பிட்டிருப்பதைக் கவனிப்பார்களாக.

இந்நாடகத்தை ஆடுவதில் ஒரு முக்கியமான கஷ்டம் என்ன வென்றால் இதில் வரும் குலகுரு பௌத்தாயனர், அமிர்த கேசரி, கேசரிவர்மன், பிசாசு முதலிய பாத்திரங்கள் சிறியவைகளாயிருந்த போதிலும், ஒவ்வொன்றும் சரியாக நடிப்பது கடினமே; அப்படிச்சரியாக நடித்தாலொழிய, நாடகம் சோபிக்காது. ஆகவே இதை நடிக்க விரும்பும் நாடக சபைகளும், கம்பெனிகளும் எல்லாப் பாத்திரங்களுக்கும் சரியான ஆக்டர்கள் இருந்தாலொழிய இந்நாடகத்தை எடுத்துக்கொள்வது உசிதமல்லவென்பது என் துணிபு.

பத்தாம் அத்தியாயம்

னி மனோஹரனுக்குப் பின் நான் எழுதிய, எனது ஏழாவது நாடகமாகிய ‘சாரங்கதர’னைப் பற்றி எழுதுகிறேன். சாரங்கதரன் கதையை நான் நாடக ரூபமாக எழுதியதற்குக் காரணம், எங்கள் சபையில் அக்காலம் எங்களுக்கெல்லாம் நான் முன்பு அறித்தபடி வேஷம் போட்டுக்கொண்டிருந்த ‘அப்பு’ என்பவனே! மனோஹரன் நாடகம் முடிந்த பிறகு, ஒரு வாரத்திற்கெல்லாம், ஒரு நாள் நான் இப்பொழுது வசிக்கும் வீட்டின் மேல்மாடியின் உடகார்ந்து கொண்டிருந்த பொழுது, மெல்லப் படியேறி அப்பு என்னிடம் வந்தான். “என்ன அப்பு? என்ன சமாச்சாரம்?” என்று நான் கேட்டேன். “ஒன்றுமில்லை - இனிமேல் நீங்கள் என்ன நாடகம் எழுதப் போகிறீர்கள் என்று கேட்க வந்தேன்?” என்று சொன்னான்.