பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

183


நாங்கள் எல்லாம் திருமலைப்பிள்ளையின் இஷ்டப்படியே, ரெயிலில் இரண்டாவது வகுப்பில்தான் போக வேண்டுமெனத் தீர்மானித்தோம். மொத்தமாக நாடகமாடும் சங்கமாகப் போனபடியால், ரெயில் அதிகாரிகள் எங்களுக்குக் குறைந்த சார்ஜில் போகும்படியான உத்தரவு கொடுத்தார்கள். சபையில், பணம் இல்லாதபடியாலும், அப்பொழுது அங்கத் தினராயிருந்தவர்களுக்கு ஊக்கம் அதிகமாயிருந்தபடியாலும், ரெயில் செலவும், சாப்பாட்டுச்செலவும் நாங்களே வகித்தோம். இப்பொழுது சில சபைகளில் வெளியூருக்குப் போவதென்றால், சபையானது மேற்சொன்ன செலவுகளை யெல்லாம் மேற்கொண்ட போதிலும், தங்கள் வீட்டிலிருந்து ரெயில் ஸ்டேஷனுக்குப் போக வர வண்டிச் செலவுகூடச் சபையார் கொடுக்க வேண்டும் என்று மன்றாடும் எனது சில நண்பர்கள் இதைக் கவனிப்பார்களாக.

ஆக்டர்கள் தவிர, இன்னும் சில அங்கத்தினர், பெங்களூரைப் பார்க்க வேண்டும் என்னும் இச்சையாலும், போய் வருவதற்கு இலவசமாயிருந்தபடியாலும், பலருடன் கூடி ஒன்றாய்ப் போவது சங்தோஷத்தைத் தரும் என்னும் எண்ணத்தினாலும் எங்களுடன் வந்தார்கள். அப்படி வந்தவர்களுள், பெங்களூருக்குப் போகக் கூடாது என்று மன்றாடிய சிலரும் இருந்தனர். முக்கியமாக அப் பொதுக் கூட்டத்தில் அக்கிராசனம் வகித்த சி. ரங்கநாதம் நாயுடும் வந்தார். முன்பே நான் குறித்தபடி எங்கள் கண்டக்டராகிய வி. திரு மலைப்பிள்ளையும் வந்தார். பரீட்சைக்காகப் படித்துக்கொண் டிருந்த எனதாருயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலு தவிர மற்ற முக்கியமான ஆக்டர்களெல்லாம் வந்தார்கள்.

காலை ரெயிலில் சென்னையிலிருந்து புறப்பட்டு இரண்டு இரண்டாவது வகுப்பு வண்டிகளைப் பூராவாக அமர்த்திக் கொண்டு, அவைகளிலேறி சாயங்காலம் இருட்டியவுடன் பெங்களூர் போய்ச் சேர்ந்தோம். அப்பொழுது தற்காலமிருப்பது போல் பெங்களூர் ரெயில் சீக்கிரமாகப் போகவில்லை.

இடையில் நாங்கள் ரெயில் பிரயாணம் செய்த பொழுது நிகழ்ந்த ஒரு முக்கியமான விஷயத்தை எழுத வேண்டியதிருக்கிறது. நாங்கள் புறப்பட்டவுடன் திருமலைப் பிள்ளை என்னைத் தன் அருகில் அழைத்து, “என்ன சம்பந்தம்,