பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

நாடக மேடை நினைவுகள்


பட்டார்கள் என்று சொல்வது அதிகமன்று. சி. ரங்கவடி வேலுடன் படித்தவராகிய சாரங்கபாணி முதலியார் என்பவர், என் தொண்டையின் நிலைமையறிந்து அவர்களெல்லாம் துக்கப்பட்டார்கள் என்று சொல்வது அதிகமன்று. சி. ரங்கவடிவேலுடன் படித்தவராகிய சாரங்கபாணி முதலியார் என்பவர், என் நிலையைப் பார்த்து, “வாத்தியார், நீங்கள் எப்படி இன்றிரவு ஆக்டு செய்ய போகிறீர்கள்!” என்று கூறி வாஸ்தவமாகக் கண்ணீர் விட்டழுதுவிட்டார். இவர்தான் எனக்கு “வாத்தியார்” என்று முதல் முதல் பெயர் வைத்தது! அப்பெயர் பிறகு சாதாரணமாக வழக்கத்தில் வந்து, இப் பொழுது எங்கள் சபையில் எனக்கு வயதிற் சிறியவர்களெல்லாம் என்னை “வாத்தியார்” என்றே அழைக்கின்றனர்.

பிறகு மற்ற ஆக்டர்களெல்லாம் எப்படி வேடம் தரித்தனர் முதலிய விஷயங்கள் ஒன்றையும் நான் அன்று கவனித்தவனே அன்று. மாத்திரைகள் சாப்பிடும்படி சொல்லிவிட்டுப் போன வைத்தியர், தொண்டைக்குச் சுடுகை தாக்கும்படியாக ஏதாவது செய்தால் கொஞ்சம் குணமாகும் என்றும் சொல்லிப் போனார்; ஆகவே, ஒரு தணல் சட்டியை வரவழைத்து, ஓர் ஊது குழாயைக் கொண்டு, அதன் சுடுகையை என் வாயிற் படும்படியாக, சுவாசத்தை இழுத்துக் கொண்டிருந்தேன், எட்டு மணி வரையில்; அதனால் கொஞ்சம் குணமாக சற்றுப் பேச முடிந்தது. உடனே கொஞ்சம் சந்தோஷப் பட்டவனாகி, ஜனங்கள் வந்துசேருவதற்கு முன், டிராப் படுதாவை எடுக்கச் சொல்லி, நான் நாடகத்தில் பேச வேண்டிய சில வார்த்தைகளைப் பேசிப்பார்த்தேன். வெளியிலிருந்து நான் கேட்டுப் பார்க்கச் சொன்ன சில நண்பர்கள் “பெரிதல்ல, சுமாராகக் கேட்கிறது” என்று சொன்ன பிறகு கொஞ்சம் மனத் தேர்ச்சியடைந்தேன். “ஊமைக்கு உளறுவாயன் உற்பாத பிண்டம்” என்னும் பழமொழிக்கிலக்காய் சந்தோஷப்பட்டேன். அதன் பிறகுதான் என் வேஷத்தைத் தரித்தேன். அப்பு, என் முகத்தில் வர்ணம் தீட்டும்பொழுதும் என் நோய்க்குக் கைகண்ட ஒளஷதமாகிய தணல் சட்டியையும் ஊது குழாயையும் விடவில்லை! அன்றிரவு நான் மேடையின் மீது நடித்ததெல்லாம், ஏதோ ஒரு பயங்கரமான கனவைக் கண்டது போல் இருக்கிறது. நாடகம் நடித்த பொழுது, மேடையின்மீது என். பாகம் ஆனவுடன், ஒவ்வொரு காட்சி