பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

191


வழக்கம். அப்படியிருந்தும் அன்று ஒரு நாள் காலை முதல் அது வரையில் ஈசனை நினைத்தவனன்று! என் தொண்டையிருந்த ஸ்திதியில் நாடகத்தில் எப்படி நடிக்கப் போகிறோமென்று கவலையுற்று, அதைச் சரிப்படுத்துவதற்கு விருதாவாக அநேகம் வழிகளைத் தேடினேன்: இரண்டு வைத்தியர்களை நாடினேன். அதை வாஸ்தவத்தில் சரிப்படுத்தக்கூடிய ஈசன் இணையடியை நாட மறந்தேன்! இப்பொழுது அதை நினைத்துப் பார்க்கும்பொழுது அன்று நான் பட்ட கஷ்டம், நான் செய்த பிழைக்குச் சரியான தண்டனையென்றே தோன்றுகிறது. அன்றுடன் போகாமல், நான் அளவுக்கு மிஞ்சி அதிகமாய் உட்கொண்ட மாத்திரைகளின் குணத்தினால், இரண்டு நாட்கள் வரையில் உடம்பெல்லாம் சூடாகி மிகவும் கஷ்டப்பட்டேன்.

மறுநாள் காலை எழுந்ததும் என் குரல் சரியாகிவிட்டது! ஈசன் செயலை அறிந்தார் யார்? காலையில் என் பழைய வழக்கப்படி ஈசனைத் தொழுத பின், இனி பிராந்தி முதலிய வஸ்துக்களை என் உயிருள்ளளவும் தீண்டுவதில்லை என்று அவர் முன்னிலையில் பிரமாணம் செய்து கொண்டேன். அன்று செய்த பிராமணத்திலிருந்து இன்றளவும் மனப்பூர்வமாய்த் தவறினவன் அன்று.

மேற்சொன்னபடி அன்று நான் என் தொண்டையைச் சரிப்படுத்துவதற்காக அரை அவுன்ஸ் பிராந்தியைச் சாப்பிட்டதும் அதனால் அடைந்த பலனையும் இவ்வளவு விவரமாய் நான் எழுதுவதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. இது எனக்கு அவமானத்தைத் தரும்படியான விஷயமே. ஆயினும் எனது நாடக மேடை அனுபவங்களை யெல்லாம் ஒன்றும் விடாது உண்மையை வெளியிட வேண்டும் என்னும் அவாவினாலும், மேலும் இதனால் இதை வாசிப்பவர்களுக்கு இது ஒரு சிறிது நற்புத்தியைப் புகட்டும் என்னும் காரணத்தினாலும் இதை வெளியிட்டுள்ளேன். தென் இந்தியாவில் எனக்குத் தெரிந்தவரையில், அநேகம் ஆக்டர்கள், அநேக நூற்றாண்டுகளாக மதுபானம் செய்து வரும் இங்கிலாந்து முதலிய தேசத்துப் பிரபல வைத்தியர்கள் அநேகர் மதுபானம் கூடாதென்றும் அதனால் ஒரு நற்பயனும் கிட்டாது என்றும் போதித்து வந்த போதிலும், நமது தேசத்திலிருக்கும் இந்த ஆக்டர்கள், கொஞ்சம் மதுவை உட்கொண்டால் உடம்பிற்கு