பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

195


அவரது தந்தையார் இனி நீ ஸ்திரீ வேஷம் தரிக்கக்கூடாது என்று கட்டளையிட்டிருந்தபடியால், இதுதான் கடைசி முறை சங்கத்தில் ஸ்திரீ வேஷம் தரிக்கப் போகிறது என்பதை அறிந்தவராய், அன்றிரவு, தன் முழுசாமர்த்தியத்தைக் கொண்டு சித்ராங்கியாக நடித்தனர். அவரது வசனங்களில் முக்கியமான பாகங்களிலெல்லாம் சபையோர் கரகோஷம் செய்து ஆமோதித்தனர் என்று நான் கூற வேண்டும்.

அன்றிரவு ஸ்திரீ வேஷம் தரித்தவர்களுக்குள் இரண்டாவதாக அ. கிருஷ்ணசாமி ஐயரைக் கூறவேண்டும். இவர் அன்று சாரங்கதரன் தாயாராகிய ரத்னாங்கிதேவியாக நடித்தார். அப்பொழுது இவர் நல்ல யௌவனத்திலும் தேகபலத்திலும் இருந்தார்; இவருடைய உருவமும் மிகவும் மெச்சத்தக்கதாயிருந்தது. சங்கீதமும் மிகவும் மெச்சத்தக்கதாயிருந்தது. இவர் எங்கள் சபையின் நாடகங்களில், தமிழிலும் தெலுங்கிலும் பல ஸ்திரீ வேஷங்கள் தரித்திருக்கின்றனர். அவற்றுள் ரத்னாங்கி தேவி ஒரு முக்கியமானதெனக் கூற வேண்டும். சோகபாகத்தில் இவர் சபையோரையெல்லாம் கண்ணீர் விட்டழச் செய்தார் என்பதற்கு ஐயமில்லை.

இந் நாடகத்தில் ஸ்திரீ பாகம் இன்னொன்றுதான். அது “மதனிகை"யெனும் தோழியின் பாகமாம். இதை நான் முன்பே குறித்தபடி, தற்காலம் திருநெல்வேலி ஜில்லாவில் அட்வோகேட்டாக இருக்கும் சாதுகணபதி பந்துலு எடுத்துக் கொண்டார். அன்றிரவு இவர் இந்த வேஷம் தரித்தபொழுது நடந்த ஒரு சிறிய விருத்தாந்தத்தை இங்கு எழுதுகிறேன். முன்பே என் நண்பர்களுக்கு நான் தெரிவித்திருக்கிறபடி எங்கள் சபையில் அக்காலம் புடவைகளில்லாதபடியால், ஒவ்வொரு ஸ்திரீ வேஷதாரியும் தான் கட்டிக்கொள்ளப் புடவைகள் எங்கேயாவதிருந்து கொண்டு வரும்படி நேர்ந்தது. இப் பழக்கத்தின்படி சாதுகணபதி பந்துலு அவர்கள், தனது சிநேகிதர்களைக் கேட்டு இரண்டு புடவைகள் வாங்கிக்கொண்டு வந்தார்; அதில் ஒன்று அதிக விலையுயர்ந்ததும் அழகமைந்தது மாயிருந்தது; அதை அவர் கட்டிக்கொண்டிருக்கும்பொழுது பார்த்த ஜெயராம் நாயகர், என்னிடம் வந்து, “என்ன சம்பந்தம்! சித்ராங்கியைவிட, அவள் பாங்கி அதிக விலையுயர்ந்த புடவையைக் கட்டிக் கொள்ளலாமா?” என்ற மெல்லக் கேட்டார். இதையறிந்த - நான் சாதுகணபதி பந்துலுவிடம்