பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

நாடக மேடை நினைவுகள்


போய், ராஜகுமாரியைவிட அவளது பாங்கி அதிக விலை உயர்ந்த சேலையைத் தரிப்பது உசிதமல்லவென்று நியாயம் எடுத்துக் கூற, கற்றறிந்த புத்திமானாதலால் பந்துலு அவர்கள் உடனே அதைக் களைந்துவிட்டு, சாதாரணப் புடவையொன்றை உடுத்திக்கொண்டதுமன்றி, விலையுயர்ந்த சேலையை, சித்ராங்கி கட்டிக் கொள்ளட்டும் என்று ஜெயராம் நாயகரிடம் கொடுத்துவிட்டார். இவ்வாறு செய்த பந்தலு அவர்களின் குணத்தை நாங்கள் எல்லோரும் மெச்சினோம். இந்த சொற்ப விஷயத்தை இவ்வளவு சவிஸ்தாரமாக நான் என் எழுதவேண்டும் என்னும் சங்கை இதை வாசிப்பவர்களுக் குண்டாகலாம். இதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. அநேக நாடக சபைகளில் (முக்கியமாக ஆமெட்சூர் சபைகளில்) ராஜகுமாரியைவிட, அவளது பாங்கி அதிக விலையுயர்ந்த நகைகளையும், சேலைகளையும் தரிப்பதை நான் பார்த்திருக்கிறேன். ராஜகுமாரியைவிட, அவளது பாங்கி அதிக விலையுயர்ந்த ராஜகுமாரி வேஷம் பூணும் ஆக்டர் கொஞ்சம் எளியவனாயிருப்பான். அவனுக்கு நகைகளையும் உயர்ந்த சேலைகளையும் இரவல் கொடுப்பார் ஒருவரு மில்லாதிருப்பார்கள்; அந்த ராஜகுமாரியின் பாங்கி வேஷம் பூணும் ஆக்டர், செல்வந்தனாயிருப்பான்; அவனுக்கு விலையுயர்ந்த நகைகளும் சேலைகளும் எளிதில் கிடைக்கக் கூடியதாயிருக்கும்; இதனால் இவர்களிருவரும் மேடையின் மீது வந்தவுடன், பாங்கியை ராஜகுமாரி யென்றும், ராஜ குமாரியைப் பாங்கி யென்றும் எல்லோரும் சந்தேகிக்க இடமுண்டாகும்! இப்படிச் செய்வது தவறு. இதைக் கற்றுணர்ந்த நமது ஆக்டர்கள் தவிர்க்க வேண்டுமென்றே, மேற்கண்ட விஷயத்தைச்சற்று விவரமாய் எழுதலானேன். ஒரு முறை எங்கள் சபையிலே, சிலவருஷங்களுக்கு முன், தசராக் கொண்டாட்டத்தில் ஒரு நாள், ஒரு கோமுட்டிசெட்டியார், ஸ்திரீ வேஷம் தரிக்கவேண்டும் என்று கோரினவராய் அநுமதி பெற்று லட்சக்கணக்கான விலையுயர்ந்த நகைகளையும், மத்தாப்பு சேலையும் அணிந்து, மேடையின்மீது பாங்கியாய்த் தோன்றினார்; வந்திருந்த அங்கத்தினரெல்லாம் கொல் என்று நகைத்துவிட்டனர்! அதனால் அவர் வெட்கப்பட்டு, மறுபடியும் அரங்கத்தின்மீது ஏறவேயில்லை! நான் சொல்ல வந்ததன் முக்கியக் கருத்தென்னவென்றால், நாடகங்களில் என்ன வேடம் தரித்தபோதிலும் அந்த வேடத்திற்குத்