பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

நாடக மேடை நினைவுகள்



என் பால்ய சிநேகிதராகிய ஸ்ரீனிவாசஐயங்கார், என்னிடம் ஏதாவது குறை இருந்தால் அதையெடுத்து அஞ்சாது கூறுபவர். அவர் பல வருஷங்களுக்கு முன் எங்கள் சபை நடத்திக்கொண்டு வந்து பிறகு நிறுத்திவிட்ட “இந்தியன் ஸ்டேஜ்” (Indian stage) என்னும் மாதாந்த பத்திரிகையில், அதுவரையில் நான் ஆடிய நாடகப் பாத்திரங்களைப் பற்றிச் சீர்தூக்கிக் கூறுங்கால், “சம்பந்தம் க்ஷயரோகம் பிடித்த யயாதியகவும், விளையாட்டின்மீதே கருத்துடைய பாலனாகிய சாரங்கதரனாகவும் நடித்ததுதான் என் மனத்திற்குத் திருப்திகரமாயிருந்தது” எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த சாரங்கதர நாடகத்தைப் பெங்களூரில் ஆடிய பொழுது அதை முடித்த விதத்தைப்பற்றி நான் எழுதவேண்டிய திருக்கிறது. நான் எழுதி முடித்தபடி நாடகம் துக்ககரமாகவே முடிகிறது. சாரங்கதரன் கொலையுண்டதுடன் நாடகம் முற்றுப் பெறுகிறது. அப்படியே அச்சிட்டுமிருக்கிறேன். நாடகக் கதையை அச்சிட்டு, வந்தவர்களுக்கெல்லாம் கொடுத்தோம்; அதன்மீது அதைப் பார்த்தவர்கள் (ஏறக்குறைய எல்லோரும் என்றே சொல்ல வேண்டும்) “இதென்ன இது? நாடகம் சோகத்துடன் முடிவு பெறலாமா? இது சரியல்ல” என்று கூறினதாக, என்னிடம் எங்கள் சபை அங்கத்தினர் வந்து சொன்னார்கள். பெங்களூரில் எங்களுக்குப் புதிதாய் நட்பினரான, எங்கள் கிரீன் ரூமுக்குள் வரத்தக்க சிலரும், “ஆம்! ஆம்! வாஸ்தவம்தான். அதை எப்படியாவது மாற்ற வேண்டும்” என்று வற்புறுத்தினர். அதன் மீது எங்கள் கண்டக்டராகிய திருமலைப் பிள்ளையை நான் கேட்க, அவரும் “அத்தனை பேர்கள் சொல்லும் பொழுது அவர்கள் இச்சைப் படி நாடகத்தைசுபகரமாய் முடித்து விடுகிறதுதானே” என்றார். அதன் மீது அவர்கள் மனம் கோணாதிருக்கச் செய்ய வேண்டுமென்று எண்ணினவனாய், மடிந்த சாரங்கதரனை பரமேஸ்வரன் வந்து உயிர்ப்பித்ததாகச் சில வார்த்தைகளைச் சேர்த்து, சுபமாக முடியும்படி செய்தேன். நாடகம் பார்க்க வந்திருந்தவர்களும் சந்தோஷமாய்ச் சென்றனர். ஆயினும் அவ்வாறு நான் அவர்களது வேண்டுகோளுக்கிணங்கியது எனக்குத் தவறெனத் தோன்றுகிறது. சாரங்கதரன் இறக்க நேரிடுவதுதான் சரியானது. பெண்டிர்க்குப் பேதைமை யென்பது ஓர் அணிகலன் என நமது முன்னோர்கள் கூறிய