பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

நாடக மேடை நினைவுகள்


ஞாபகமிருக்கிறது. இந்த ஜகன்னாத ஐயர் கம்பெனியில் சித்ராங்கி மாத்திரமன்று; சாரங்கதரனாக நடித்த நடேசனும் சுமந்திரனாக நடித்த சுப்பையா என்னும் சிறுவனும் இந்நாடகத்தை எங்கள் சபையில் நடத்துவது போலவே நடத்தினார்கள். இதற்குக் காரணம் என்னவென்று நான் விசாரித்ததில், நான் முன்பு கூறிய ம. கந்தசாமி முதலியார் என்பவர், இவர்கள் கம்பெனியைச் சேர்ந்து இவர்களுக்கு எங்கள் சபையில் இந்நாடகத்தை நடத்தும் முறையை யெல்லாம் கற்பித்ததாக அறிந்தேன். இந்த நாடகக் கம்பெனி யில் சில வருஷங்களுக்கு முன் முக்கியமான பாகங்கள் ஆடிக் கொண்டிருந்த சிலர் இளவயதிலேயே காலகதியடைந்தனர் என்பது இப்பொழுதும் எனக்குத் துக்கம் விளைவிக்கிறது.

பெங்களூரில் சாரங்கதர நாடகம் முடிந்தவுடன் நாங்கள் எல்லாம் மிகவும் சந்தோஷப்பட்டோம். அதற்கு முக்கியக் காரணம், வந்திருந்த ஜனங்கள் எல்லாம் நன்றாயிருந்ததெனக் கூறியதுமன்றி, அந்நாடகத்தில் அதிகப் பணம் வசூலானதே யாம். முதல் நாடகத்தைப் போல் குறைந்த வசூலாயிருந்தால், சபைக்கு நஷ்டமே ஆகியிருக்கும். பெங்களூருக்குப் போகக்கூடாது என்று ஆட்சேபித்த எதிர்க் கட்சியார் எங்களை ஏளனம் செய்திருப்பார்கள். அந்தப் பயமே எங்களுக்குப் பெரிதாயிருந்தது; சாரங்கதர நாடகத்தில் நல்ல வசூலான பின்தான் அந்த பயம் எங்களை விட்டகன்றது. மறுநாள் நாங்கள் விழித்தெழுந்தவுடன் வெங்கடகிருஷ்ண நாயுடும் நானுமாகத் தபால் ஆபீசுக்குப் போய் இந்த சந்தோஷகரமான சமாச்சாரத்தைத் தந்தி மூலமாகச் சென்னையிலுள்ள எங்கள் அங்கத்தினர்க்குத் தெரிவித்தோம். இந்த எங்கள் பெங்களூர்ப் பிரயாணம் ஈசன் கடாட்சத்தினால் சந்தோஷமாய் முடிந்ததற்காக நான் உவப்பை அடைந்ததற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. சென்னையிலிருந்து வெளியூருக்குப் போய் ஒரு அமெடூர் (Amateur) நாடக சபை நடித்துப் பெயர் பெற்றது இதுதான் முதன் முறை; இப்படி நாங்கள் முதன் முறை வெளியூருக்குப் போனதில் ஏதாவது கெடுதியாய் முடிந்திருந்தால், எங்கள் சபையார் வெளியூருக்குப் போவதைப்பற்றி மறுபடியும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள் என்பது திண்ணம். இந்தப் பெங்களூர்ப் பிரயாணம் நன்மையாக முடிந்தது, எங்கள் சபையோரை அடிக்கடி வெளியூருக்குப்