பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

203


போகும்படி உந்தியதுமன்றி, எங்கள் சபையைப் பார்த்து இதர நாடக சபைகளையும் அவ்வாறு செய்யும்படி உந்தியதென்ப தற்குச் சந்தேகமில்லை. இந்தப் பெங்களூர்ப் பிரயாணத்தினாலுண்டான இரண்டாம் நன்மை எங்கள் சபையைப்போன்று ஒரு தமிழ் நாடகச் சபை பெங்களூரில் ஏற்படுத்தப்பட்டதேயாம்.

எங்கள் சபையை நாங்கள் சென்னையில் 1891ஆம் வருஷம் ஸ்தாபித்தபொழுது தமிழ் நாடகமானது சென்னை ராஜதானியில் எங்கணும் விருத்தியடைய வேண்டுமென்பது எங்கள் முக்கியக் கருத்துகளில் ஒன்று என்று வெளிப்படுத்தியதற்குச் சரியாக, தமிழ் நாடகத்தை சென்னை ராஜதானியில் அபிவிருத்தி செய்வதற்கு இது மிகவும் அனுகுணமாயிருந்தது. பிறகு எங்கள் சபையார்பன்முறை, கொழும்பு, யாழ்ப்பாணம், கும்பகோணம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, மாயவரம், திருவனந்தபுரம், மதுரை முதலிய இடங்களுக்கும் போயிருக்கிறார்கள். அவ்விடங்களிலெல்லாம் பெங்களூரில் நடந்தது போல் எங்களைப் பார்த்து எங்கள் சபையைப் போன்ற தமிழ் நாடக சபைகள் ஸ்தாபிக்கப்பட்டதே, எங்கள் சபைக்குப் பெரிய கீர்த்தியாகக் கொண்டாடுகிறேன். எங்கள் சபையின் நாடகங்களைப் பார்த்து, அவ்விடங்களிலெல்லாமிருந்த கற்றறிந்தவர்கள், நாடகமாடுவதில் தவறில்லையென்றும், அதில் நன்மையுண்டென்றும் அறிந்தவர்களாய், எங்கள் சபையைப்போன்ற சபைகள்ஸ்தாபித்திருக்கின்றனர். அச்சபைகளும், அச்சபைகளிலிருந்துண்டான கிளைச் சபைகளும் இன்னும் அந்த ஊர்களிலெல்லாம் வளர்ந்து வருகின்றன. அச்சபையோர்களெல்லாம், எங்கள் சுகுண விலாச சபையை, தாயச் சபையாக ஒப்புக்கொள்ளுகின்றாரென்று நான் உறுதியாய்க் கூறலாம். பெங்களூரில் மேற்சொன்னபடி ஸ்தாபிக்கப்பட்ட நாடக சபையானது எங்கள் சபையின் உத்தரவின்மீது அதன் கிளைச் சபையாகவே (Branch Sabha) ஸ்தாபிக்கப்பட்டது. இக் கிளையை ஸ்தாபித்து அதற்காக மிகவும் உழைத்தவர்கள் சி.கே. ஷண்முகராஜ செட்டியார், ராமாநுஜ முதலியார், கோவிந்தராஜ முதலியார், எம்.டி. நாராயணன், மகாதேவ முதலியார் முதலியவர்கள். மூன்று நான்கு வருஷங்கள் இக்கிளைச்சபை ஆடியிருக்கிறது. இவர்கள் முதல் முதல் ஆட