பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

நாடக மேடை நினைவுகள்


ஆரம்பித்தபொழுது இவர்களுக்குள் ஸ்திரீவேஷம் தரிக்கத் தக்கவர்கள் இல்லாதிருந்தபடியால், சென்னையிலிருந்து, எங்கள் அங்கத்தினருள் ஒருவராகிய அ. கிருஷ்ணசாமி ஐயரைப் பன்முறை பெங்களூருக்கு நாடகமாட அனுப்பியிருந்தோம். சில வருஷங்களுக்குப் பிறகு இக் கிளைச்சபையானது யாது காரணம் பற்றியோ நசித்துவிட்டது. நான் சென்ற வருஷம் பெங்களூக்கு, அங்கு வாழ்க்கைப்பட்டிருக்கும் என் குமாரத்தியைப் பார்ப்பதற்காகப் போனபொழுது, விசாரித்ததில், பெங்களூரில் தமிழ்ச் சபைகள் ஒன்றும் இருப்பதாக அறிய வில்லை. இது எனக்கு மன வருத்தத்தை உண்டுபண்ணிற்று. பெங்களூரில் அனேக தமிழர்கள் குடியிருக்கின்றனர்; இருந்தும் கன்னட நாடக சபைகளும் ஆங்கில நாடக சபைகளும் இருக்கின்றனவேயொழிய தமிழ் நாடக சபையில்லை. அங்குள்ள தமிழ் அபிமானிகள் இக்குறையைச் சீக்கிரம் தீர்ப்பார்களென்று இதை எழுதலானேன்.

பதினோராம் அத்தியாயம்

பெங்களூரிலிருந்து நாங்கள் திரும்பி வந்தவுடன் எங்கள் முக்கியமான கோரிக்கை, அவ்விடம் நடித்துப் பெயர்பெற்ற சாரங்கதர நாடகத்தை சென்னையில் நடத்த வேண்டுமென்பதாயிருந்தது. அப்படியே நடத்த வேண்டுமென்று நிர்வாக சபையில் தீர்மானித்து, விக்டோரியா பப்ளிக் ஹாலுக்குப் பணம் கட்டி விட்டோம். கட்டின மறுதினம் ஒரு பெருங் கஷ்டம் நேர்ந்தது. சித்ராங்கியாக நடித்த ஜெயராம் நாயகருடைய தகப்பனார் எப்படியாவது இந்தக் கடைசிதரம் அவர் ஸ்திரீ வேஷம் தரிப்பதற்கு உத்தரவளிப்பார் என்று மூடத்தனமாய் எண்ணியிருந்தோம்; அவர் ஒரே பிடிவாதமாய் தான் மீசை எடுத்து விடுவதற்கு உடன் படமாட்டேன் என்று சொன்னதாக ஜெயராம் நாயகர் எங்களுக்கு மிக்க வருத்தத்துடன் தெரிவித்தார். ஹாலுக்குப் பணம் கட்டியாய் விட்டது. நாடகத்திற்கு இன்னும் ஒரு வாரம்தானிருந்தது. நாங்கள் இன்னது செய்வதென்று அறியாதவர்களாய்க் கலங்கிக்