பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

நாடக மேடை நினைவுகள்


களில் பெரும்பாலர் நன்றாயிருந்ததெனக் கூறியபோதிலும், என் மனத்திற்கு மாத்திரம் திருப்திகரமாயில்லை. ஸ்திரீவேஷம் தரிப்பதற்குப் பொருத்தமுடையவர்கள் ஆண் வேடம் தரிக்கலா காது என்பது என் கொள்கை. இக்கொள்கை அப்பொழுது மிருந்தது இப்பொழுதும் எனக்கிருந்தது. இதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால், ஸ்திரீ வேடம் தரித்து சில முறை அரங்கத்தின்மீது ஆடிய பிறகு, ஆண் வேடம் தரித்தால், ஸ்திரீகளுக்குரிய அபிநயமானது அவர்கள் அறியாத படி வந்து விடுகிறது. ஆண் வேடம் சாதாரணமாகப் பூணுபவர்கள், எப்பொழுதாவது ஸ்திரீ வேடம் தரித்தால் ஆடவர்களுக்குரிய அபிநயம் கலந்து விடுகிறது. இதற்காக, முதலிலேயே நாடக மேடையின் மீதேற விரும்பும் ஒவ்வொரு ஆக்டரும் தனக்கு ஸ்திரீ வேடம் சரியானதா, அல்லது ஆண் வேடமே சரியானதாவென்று நன்றாய் ஆராய்ந்து மற்றவர்களுடைய அபிப்பிராயத்தையும் கேட்டுத் தீர்மானித்து அந்தத் தீர்மானத்தினின்றும் மாறாதிருப்பதே நலமாம் என அப்பொழுதும் எண்ணினேன். நாடக மேடை. அனுபவம் ஏறக்குறைய நாற்பது வருடங்கள் ஆகியும் இப்பொழுதும் எண்ணுகிறேன். இதற்கு உதாரணமாக எனது பழைய நண்பராகிய அ. கிருஷ்ணசாமி ஐயரையே எடுத்துக் கூறுவேன். இவர் ஸ்திரீ வேஷத்துக்குத்தான் உரித்தானவர் என்பது என் தீர்மானம். அவரும் அப்படியே ஒப்புக் கொள்வாரென்பதற்குத் தடையில்லை. இவர் சற்றேறக்குறைய முப்பத்தைந்து வருடங்களாக நாடக மேடையில் பெயர் எடுத்ததெல்லாம் ஸ்திரீ வேஷங்களி லேயே. லீலாவதியாகவோ, பத்மாவதியாகவோ, வரூதினி யாகவோ, சந்திரமதியாகவோ, சபலை யாகவோ, கௌரீ மணியாகவோ, சௌமாலினியாகவோ, சத்யபாமையாகவோ, கைகேயியாகவோ, இன்னும் இத்தகைய ஸ்திரீவேடங்களில் இவருக்கிணையில்லையென்றே சொல்ல வேண்டும். ஆயினும் இவர் இரண்டொரு முறை ஆண் வேடம் தரித்து, சாருதத்தனாகவும், நந்தனாகவும் நடித்தபொழுது, அநேகர் அவ்வளவு பொருத்தமாகவில்லை யென்றே சொன்னார்கள். அதுதான் எனது அபிப்பிராயமும். இந்த ஆண் வேடங்களில் இவர் நடிக்கும்பொழுது இவருமறியாதபடி ஸ்திரீகளின் அபிநயம் வந்து விடுகிறது என்பது என் அபிப்பிராயம். மற்றவர்களும் அப்படியே கூறியிருக்கின்றனர்.