பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

நாடக மேடை நினைவுகள்




எனது நண்பர் தான் நடிக்க மிகவும் ஆவல் கொண்டிருந்த வேடங்களில் இந்த சித்ராங்கி யொன்று. இதைப்பற்றியே நான் என்றும் மறக்கமுடியாத துக்ககரமான நினைவு ஒன்று உண்டு.

எங்கள் சபையில் எனதாருயிர் நண்பர், கடைசியாக ஒத்திகை செய்தது இந்த சித்ராங்கி பாத்திரமேயாம். ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை சாரங்கதர நாடகம் நடத்துவதற்காக நான் ஒத்திகை நடத்த வேண்டி வந்தது. அச்சமயம் தனக்கு மிகவும் தலை நோயாயிருக்கிறதென எனது நண்பர் கூற, “ஆனால் நீ ஒத்திகை செய்ய வேண்டாம். உன் உடம்பை ஜாக்கிரதை யாகப் பார்த்துக்கொள்” என்று நான் சொல்லியும், என் வார்த்தையைக் கேளாது, தன் பாட்டுகளை யெல்லாம் பாடி ஒத்திகையை முடித்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றார். போனதும் 102 டிக்ரி ஜுரம் வந்து விட்டது. ஒத்திகையினால் தான்ஜுரம் வந்ததென்று நான் சொல்லவேயில்லை. ஆயினும் அந்த ஒத்திகையினால் அது அதிகப்பட்டது என்பது என் அபிப்பிராயம். அதுதான் அவர்கடைசி முறை எங்கள் சபைக்கு வந்தது. அப்படியே படுக்கையாயிருந்து, காலவியோசமானார் ஒரு விதத்தில் எனது நண்பர் தன் ஆருயிரை எங்கள் சபைக்காகக் கொடுத்தார் என்றே நான் கூற வேண்டும். எனது நண்பனைப்பற்றி இவ்வளவு அதிகமாக நான் எழுதுவது, இதைப் படிப்பவர்களுக்கு ஓர் ஆச்சரியமாயிருக்கலாம். அப்படியிருந்தால் என்னை மன்னிக்கும்படிக் கேட்டுக் கொள்ளுகிறேன். 28 வருஷங்கள் என்னுடன், எங்கள் சபையின் அரங்கத்தில் நடித்த எனது நண்பனுக்கு நான் செய்ய வேண்டிய கைம்மாறில் நூற்றிலொரு பங்கையாவது, இவற்றையெல்லாம் எழுதி, செலுத்த முயல்கிறேன்.

பன்னிரண்டாம் அத்தியாயம்

1895ஆம் வருஷம் வரையில் தம்புச் செட்டித்தெருவில் விஜயரங்கம் மஹாராஜாவின் பெண்கள் பாடசாலையில் இருந்த எங்கள் சபையானது, அவ்வருஷத்தின் முடிவில் சில மாதங்கள் முத்தியாலுப்பேட்டை பள்ளிக்கூடத்தில் இருந்து