பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204216நாடக மேடை நினைவுகள்


மெச்சினார்கள். ஆயினும் இது புதியதாயிருந்தபடியால், அநேகர், பொம்மைகளுக்கு வேஷந்தரித்து, இப்படிக் காட்டுகிறார்களா என்னவென்று வினவினர். அரங்கத்திற்கு உள்ளே வந்து பார்த்த பிறகுதான் பொம்மைகள் அல்ல, ஆக்டர்கள் தான் அவ்விதம் நிற்கின்றனர் என்பதை அறிந்தனர். இதைப் பற்றிய இன்னொரு வேடிக்கை எனக்கு ஞாபகம் வருகிறது. அன்றைத் தினம் நாடகங்களுக்காக, சில தினங்களுக்கு முன்னதாகவே எங்கள் வழக்கம் போல், சுவர்களில் நோடீசுகளை ஒட்டியபொழுது, அவற்றுள் “சாரங்கதரா (in Tamil) ருக்மாங்கதா (in Tableau)” என்று அச்சிட்டிருந்தோம். அதைக் கண்ட ஒருவர் ஸ்ரீனிவாச ஐயங்காரை “சாரங்கதரா நாடகத்தை தமிழில் நடிக்கப்போகிறீர்கள், சரிதான்; ருக்மாங்கத நாடகத்தை எந்தப் பாஷையில் நடிக்கப்போகிறீர்கள்?” என்று வினவினார்! Tablean என்பது ஒரு பாஷை என்று எண்ணிக் கொண்டார்! இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், அப்படிக் கேட்டவர், கவர்ன்மெண்டு இலாகாவில், ஆங்கிலத்திலிருந்து தமிழில் கவர்ன்மெண்ட் பிரசுரங்களை மொழிபெயர்க்க வேண்டிய உத்யோகஸ்தர்!

மேலும் இந்த 1896ஆம் வருஷம் ஸ்தாபிக்கப்பட்ட எங்கள் சபையின் தெலுங்குப்பிரிவு, “அமித்ரமித்ரா” என்னும் தெலுங்கு நாடகத்தை நடத்தியது. முன் வருஷத்தில் நடத்திய தெலுங்கு நாடகத்தின் பெயர், “ராஜஹம்சா”. இந்த இரண்டு தெலுங்கு நாடகங்களும், எங்கள் சபைக்கு அப்பொழுது காரியதரிசியாயிருந்த முத்துக்குமாரசாமி செட்டியார் எழுதியவை. தெலுங்குப் பிரிவு ஒன்றை சபையில் ஸ்தாபித்த பின் தெலுங்கு அங்கத்தினர் பலர் சேர்ந்தனர். முதல் தெலுங்கு நாடகமாகிய ராஜஹம்சா என்னும் நாடகத்தைப் பற்றி விசேஷமாகக் கவனிக்கத்தக்கது எனக்கு அவ்வளவாக ஞாபகமில்லை. ஒன்றுமாத்திரம் ஞாபகமிருக்கிறது. இந்த நாடகத்தின் ஒத்திகைக ளெல்லாம் பூரணமாகும் பொழுது கே. ஸ்ரீநீவாசன் என்பவர் ஒருவர் அங்கத்தினராகச் சேர்ந்தார்; இவர் தெலுங்கா; கம்பீரமான உருவமும், கொஞ்சம் சங்கீத ஞானமும் உடைய வராயிருந்தார். இவருக்கு ஏதாவது பாத்திரம் கொடுக்க வேண்டுமென்று விரும்பி, இவருக்காக நாடக ஆசிரியராகிய ஊ. முத்துக் குமாரசாமி - செட்டியார், “பாரதிபிரசாத்” என்கிற பாத்திரத்தைச் சிருஷ்டித்துக் காட்சிக்கும் காட்சிக்கும் இடையே இவரைப்