பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

219


பிள்ளைக்கு அப்பொழுது சுமார் 17 அல்லது 18 வயது இருக்கும்; பூ. ரங்கநாத முதலியாரது பிள்ளைகளுள் எல்லாம் இவன்தான் மிகுந்த புத்திசாலி; பச்சையப்பன் கலாசாலையில் தன் வகுப்புகளில் முதலாக இருந்து தனது உபாத்தியாயர்களுடைய நன்மதிப்பைப் பெற்றவன். இப்படிப்பட்ட நற்குணமும் நன்னடக்கையும் உடைய வாலிபன், இது நடந்த சில மாதங்களுக்குள், காலகதியடைந்தான். அதுவும் அவன் மடிந்த தினம், எங்கள் சபையோர் வருஷாந்திர கொண்டாட்டம் கொண்டாடும் நாள்! கருணையங் கடவுளின் இச்சை அவ்வாறு இருந்தது! பேதை மாந்தர்களாகிய நாம் இதற்கு என்ன சொல்வது? ஆங்கிலத்தில், ஸ்வாமியானவர் இவ்வுலகில் யார்மீது பிரியம் அதிகமாக வைக்கிறாரோ, அவர்களைத் தன்னிடம் சீக்கிரத்தில் அழைத்துக்கொள்ளுகிறார் என்று ஒரு வாக்கியமுண்டு. அதன்படி இங்கு நடந்தது போலும்.

1896ஆம் வருஷம் எங்கள் சபையின் சரித்திரத்தில் ஒரு முக்கியமான வருஷம் என்று இன்னொரு விதத்திலும் சொல்லவேண்டும். இவ்வருஷந்தான் முதல் முதல் எங்கள் சபையின் தினக் கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஜூலை மாதத்தில் எங்கள் சபை ஏற்படுத்தப்பட்டதால் அந்த மாதம் இக்கொண்டாட்டத்தை ஆரம்பித்தோம். இவ்வருஷம் ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் சத்திரத்தின் மேல்மாடியில், காலை முதல் அங்கத்தினரெல்லாம் சேர்ந்து, சிற்றுண்டி, உணவு முதலியன வெல்லாம் அருந்தி, சாயங்காலம் விக்டோரியா பப்ளிக் ஹாலில் கூட்டம் வைத்துக் கொண்டோம். இந்த முதல் கூட்டத்தில் அக்கிராசனம் வகித்தவர் காலஞ்சென்ற வித்யா வினோதி ராவ்பகதூர் பி. அநந்தாச்சார்லு C.I.E. அவர்கள். இவ்வருஷம் முதல் தற்காலம் வரையில், இந்த வருஷாந்தரக் கொண்டாட்டங்கள் நிறைவேறி வருகின்றன. இவைகளைப் பற்றி சவிஸ்தாரமாய்ப் பிறகு நான் எழுத வேண்டி வரும்.

இந்த வருஷத்தில்தான் நான் “மனோரமா” அல்லது “இரண்டு நண்பர்கள்” என்னும் ஒரு புதிய நாடகத்தை எழுதி முடித்தேன். இது நான் எழுதியிருக்கும் நாடகங்களில் ஒரு முக்கியமான நாடகமாகையால் இதைப்பற்றிக் கொஞ்சம் விவரமாய் எழுத விரும்புகிறேன்.

இந்த நாடகத்திற்கு “மனோரமா” என்று ஒரு பெயர் வைத்தும், அப்பெயர் தற்காலம் வழங்காது, “இரண்டு