பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

225


ஆசாமியல்லவா நீ!” என்று ஏளனம் செய்வார். பிறகு அநேக முறை என் கையிற் பிடித்த கத்தியால் நாடகமாடும்பொழுது பலருக்குக் காயம் உண்டு பண்ணியிருக்கிறேன். அதைப்பற்றிப் பிறகு நான் சவிஸ்தார மாய் ஆங்காங்கு எழுத வேண்டி வரும். இதற்கெல்லாம் இன்றைத் தினம்தான் “பிள்ளையார் குட்டு” ஆரம்பம். இந்நாடகமானது இரண்டாம் முறை எங்கள் சபையோரால், பெங்களூரில் ஆடப்பட்ட பொழுது, முன்பு நடந்ததைக் கவனித்தவனாய், இக்காட்சியில் கையில் மரக் கத்தியொன்றுடன் பேசினேன். அப்பொழுதும் கோபவேசத்தால் அதை வீசும்பொழுது, ராணுவ வீரனாக நடித்த ஒரு ஆக்டருக்கு அதனால் கொஞ்சம் காயப்படுத்தினேன். அதன் பிறகு இந்நாடகத்தை ஆடும்பொழுதெல்லாம் இக்காட்சியை அடியுடன் ஆடுவதையே விட்டேன்!

இந்நாடகம் எங்கள் சபையில் 1900ஆம் வருஷம் வரையில் சில சமயங்களில் ஆடப்பட்டது. அதற்கப்புறம் மேலே நான் குறித்த காரணம்பற்றி எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலு இதை ஆட விரும்பவில்லை. அக்காரணத்தினால் 1900ஆம் வருஷம் முதல் 1927ஆம் வருஷம் வரையில் இந்நாடகம் எங்கள் சபையில் ஆடப்படவில்லை. அவ்வருஷத்தில் எனது நண்பர் சத்தியமூர்த்தி ஐயர் எங்கள் சபையில் தமிழ் கண்டக்டராக வந்த பொழுது, ‘இது நல்ல நாடகமாயிருக்கிறதே! இதை ஏன் நடிக்காது விட்டீர்கள்?’ என்று கூறி இதை எடுத்துக்கொண்டார். அச்சமயம், தற்காலம் நான் கதா நாயகனாக நடிக்கும்போதெல்லாம் கதாநாயகியாக நடிக்கும் எனதுயிர் நண்பர் கா. நாகரத்தினம் ஐயர் மனோரமா வேடம் பூண்டார். சி. ரங்கவடிவேலுக்கப்புறம் இவர்தான் அவ்வேடம் பூணத்தக்கவர் என்று சபையோரால் மதிக்கப்பட்டது. இதைப்பற்றி விவரமாய்ப் பிறகு எழுத வேண்டி வரும்.

இந்த “இரண்டு நண்பர்”களைப் பற்றிய இன்னொரு முக்கியமான சங்கதி உண்டு. 1891ஆம் வருஷம் எங்கள் சபை ஸ்தாபிக்கப்பட்டது முதல் 1929ஆம் வருஷம் வரையில் அதாவது 38 வருஷமாக வேறெந்தச் சபையிலும் நான் நடித்தவனன்று; அந்த 1929ஆம் வருஷம் நானும் எனதுயிர். நண்பர் நாகரத்தினமும் மதுரை டிராமாடிக் கிளப்பில், இதை