பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

நாடக மேடை நினைவுகள்


முதல் முதல் நடித்தோம்; அப்போது நாங்கள் ஆடிய இரண்டு நாடகங்களில் இது ஒன்றாகும். இதைப் பற்றியும், மதுரை மீனாட்சியின் கிருபையால், அங்கு எனக்குக் கிடைத்த ஆக்டர் நண்பர்களைப்பற்றியும் பிறகு எழுதுவேன்.

பதின்மூன்றாம் அத்தியாயம்

1897ஆம் வருஷத்தில் ‘பித்தம் பிடித்த வீரன்’ என்கிற நாடகத்தை எழுதினேன். இதைப் பிறகு நான் அச்சிட்ட பொழுது ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்னும் பெயருடன் வெளிப்படுத்தினேன். இதை ஏறக்குறைய ஒரு வாரத்தில் எழுதி முடித்தேன் என்று ஞாபகமிருக்கிறது. அப்படி அவசரப்பட்டு எழுதி முடித்ததற்கு ஒரு காரணமுண்டு. அச்சமயம் சென்னை ராஜதானியில் கருப்பு அல்லது க்ஷாமம் உண்டாகி எளிய ஜனங்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். அவர்கள் தௌர்ப்பாக்கியஸ்திதியை நிவர்த்திப்பதற்காக க்ஷாம நிவாரண நிதி என்னும் ஒரு பண்டு ஏற்படுத்தப்பட்டது. அதற்கு என் தமயனாருடைய மாமனாராகிய திவான்பஹதூர் பா. ராஜரத்தின முதலியார் ஒரு கௌரவக் காரியதரிசியாயிருந்தார். அவர் அந்தப் பண்டுக்காக ஒரு நாடகம் நடத்தி அதன் வரும்படியை அந்தப் பண்டுக்குச் சபையோர் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அப்படியே ஒப்புக்கொண்டு சீக்கிரத்தில் ஒரு நாடகமாட வேண்டுமென்று எங்கள் சபை நிர்வாக சபையாரால் தீர்மானிக்கப்பட்டது. புதிய நாடகமாயிருந்தால்தான் அதிகப்பணம் வசூலாகுமென்று கூறி, நான் புதிய நாடகம் ஒன்று எழுத ஒப்புக் கொண்டேன். அப்படி எழுதின நாடகம்தான் இந்த “முற்பகற் செய்யின் பிற்பகல் விளையும்” எனும் நாடகம்.

இந்த நாடகத்தின் கதை எனக்கே பிடிக்கவில்லை யென்றால் மற்றவர்களுக்கு எப்படியிருக்கும்? தந்தையே வெறுக்கும்படியான குமாரன் எவ்வளவு புத்திசாலியாயிருக்க வேண்டும்? இந்நாடகத்திலுள்ள பல குற்றங்களின்மத்தியில் ஒரு சிறு குணம் மாத்திரம் உண்டு. அதாவது, கதாநாயகன்பைத்தியம் பிடித்துத்