பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

நாடக மேடை நினைவுகள்


அமைப்பாகிய “அமலாதித்யன்” எனும் நாடகத்தை எழுதுவதற்கு எனக்குச் சுமார் ஏழு வருடங்கள் பிடித்ததைக் கூறுவேன்.

இந்த நாடகமானது எங்கள் சபையோரால் ஒருவிதத்தில் ஒத்திகையேயின்றி நடத்தப்பட்டதென்று சொல்லலாம்; இதற்கு ஒரு முழு ஒத்திகையாவது நடத்தியதாக எனக்கு ஞாபமில்லை. ஒத்திகையேயில்லாமல் நாடகத்தை நடத்தியது சரியென்று சொல்லவில்லை; அப்படிச் செய்தது தவறுதான். நடந்த உண்மையை எழுத வேண்டுமென்று இதை வரையலானேன். இவர்கள் சபையிலேயே இம்மாதிரி நடந்ததே நாம் ஏன் அம்மாதிரி செய்யலாகாது என்று, மற்றவர்கள் இதை உதாரணமாகக் கொள்ளாதிருக்குமாறு வற்புறுத்த விரும்புகிறேன்.

இந்நாடகம் விக்டோரியா பப்ளிக் ஹாலில் இவ்வருஷம் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி ஆடப்பட்டது. இதுதான் தர்ம கைங்கரியமாக நாங்கள் ஆடிய நாடகங்களில் முதலானது. அக்காரணம்பற்றி ஹால் நிரம்ப ஏராளமான ஜனங்கள் வந்திருந்தனர். எங்கள் செலவெல்லாம் போக ரூ.214-4-8, க்ஷாம நிவாரண நிதிக்குக் கொடுத்தோம். நாடகமானது சென்னைகார்ப்பொரேஷன் அக்கிராசனாதிபதியாகிய சர்ஜார்ஜ் மூர் (Sir George Moore) என்பவரின் முன்னிலையிலும் ஆதரவிலும் நடத்தப்பட்டது. இந்நாடகம் ஆரம்பித்த பொழுது நடந்த ஒரு விந்தையை இனி எழுதுகிறேன்.

எங்கள்சபையில், இதுவரையில், மற்ற நாடகக் கம்பெனிகளிலும் சபைகளிலும் நடப்பது போலல்லாமல், நாடகம் இத்தனை மணிக்கு ஆரம்பமாகும் என்று குறித்தபடி ஆரம்பிப்பது வழக்கம். சுகுண விலாச சபையில் குறித்த காலப்படி எதுவும் ஆரம்பிக்கப்படும் என்னும் பெயரைப் பெற்றிருந்தோம். இன்றைத் தினம் என்ன காரணம் பற்றியோ, முதல் காட்சியில் வரவேண்டியவர்களாகிய, ஸ்திரீவேடம் பூண வேண்டிய அ. கிருஷ்ணசாமி ஐயரும் சி. ரங்கவடிவேலும், ஆரம்ப காலத்திற்குப் பதினைந்து நிமிஷந்தான் இருந்த போதிலும், தலை டோபாவும் கட்டிக்கொள்ளாதிருந்தார்கள்! அவர்கள் ஸ்திரீவேஷம் முற்றிலும் பூணுவதற்குக் குறைந்த பட்சம் அரை மணி நேரமாகும் என்பதைக் கண்டேன்; ஒரு நிமிஷம் இன்னது செய்வதென்று தெரியாது திகைத்தேன்; உடனே ஒரு தீர்மானத்திற்கு வந்து, அவர்களிருவரையும்