பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

நாடக மேடை நினைவுகள்


கே. ஸ்ரீனிவாசன் என்பவர் எங்கள் சபையைவிட்டு நீங்கிய வரையில் பன்முறை நடிக்கப்பட்ட போதிலும், அதன் பிறகு, அவ்வளவாக நடிக்கப்படவில்லை. தமிழ் பாஷையில் நடிக்கப்பட்டதைப் பற்றிப் பிறகு எழுதுகிறேன்.

இதே வருஷம் நான் தமிழில் எழுதிய “சத்ருஜித்” என்னும் நாடகம் நடிக்கப்பட்டது. இதைப்பற்றி நான் சற்று விவரமாய் எழுத வேண்டும். இதற்கு ஆங்கிலத்தில் “குருட்டுப் பேராசை” (Blind Ambition) என்கிற மற்றொரு பெயர் கொடுத்தேன்; பேராசையால் ஒருவனுடைய கண்கள் மழுங்கிப் போகின்றன என்பது இதன் அர்த்தம்; மேலும் கதாநாயகன், அரசனாக வேண்டும் என்னும் பேராசையால், தன் சொந்த மனைவி மக்களைத் துறந்து, அரச குமாரியை மணந்து, பிறகு தன் இரு கண்களையும் இழந்து அந்தகனாகினான் என்பதையும் ஒரு விதத்தில் ருசிக்கும்படி, இப் பெயரை இந் நாடகத்திற்குத் தந்தேன்.

இந்நாடகத்தை நான் எழுதியதற்குக் காரணம் அடியிற் கண்டவாறு:

இவ் வருஷம் சென்னைக்கு, பம்பாயிலிருந்து ஒரு பாரசீக நாடகக் கம்பெனியர் வந்து, எஸ்பிளநேடில் (Esplanade) சில வருஷங்களுக்கு முன் நாடகக் கொட்டகை இருந்த இடத்தில், ஒரு பெரிய கொட்டகை போட்டு, அதில் இடைவிடாது மூன்று மாத காலம், ஹிந்துஸ்தானி பாஷையில் நாடகங்களை ஆடினார்கள். இந்த மூன்று மாதமும் ஏறக்குறைய ஒரு நாள் தவறாது ஆயிரக்கணக்கான ஜனங்கள் இவர்களது நாடகங்களைப் பார்த்து வந்தனர். அநேக தினங்களில் டிக்கட்டுகள் அகம் படாமற் போயின. சனிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமை களிலும் காலையிலேயே டிக்கட்டுகள் வாங்காவிட்டால், நாடகம் பார்க்க முடியாதிருந்தது. இத்தனைக்கும் இவர்கள் நாடகமாடிய பாஷை இந்துஸ்தானி; சென்னையிலுள்ள பெரும்பாலர்க்கு இப்பாஷையே அர்த்தமாகாதது; இருந்தும், அது வரையில் நாடகங்களைப் பார்க்க விருப்பமில்லாதவர்கள் உட்பட, சென்னையில் ஆண் பெண் எல்லோருடைய மனத்தையும் கவர்ந்ததற்குக்காரணமென்னவென்று கண்டறிய வேண்டுமென்று, நானும் இவர்களது முக்கியமான நாடகங்க்ளை யெல்லாம் போய்ப் பார்த்தேன். இதற்குக்