பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/250

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

235


இவர்களுக்குப் பிறகுதான், ஒவ்வொரு படுதாவிற்கும் ஏற்றபடி, பக்கப் படுதாக்களும் ஜாலர்களும் இருக்க வேண்டுமென்று தென் இந்திய மேடை அறிந்தது; ஆயினும் இன்னும் இதை முற்றிலும் அறியவில்லையென்றே நான் கூற வேண்டும்; ஏனெனில், இப்படிப்பட்ட ஆபாசங்கள் இன்னும் அநேக நாடக மேடைகளில் தற்காலத்திலும் காணலாம்.

மூன்றாவது, இம்மாதிரியான சீர்திருத்தம் நாடகப் பாத்திரங்களின் உடைகளிலும் இப்பாரசீகக் கம்பெனியார் செய்தனர். எந்தெந்த நாடகப் பாத்திரம் எப்படி எப்படி உடை தரிக்க வேண்டுமோ அதன்படி தரிக்கச் செய்வதில் மிகவும் கண்டிதமாயிருந்தனர். எவ்வளவு சிறந்த ஆக்டராயிருந்த போதிலும், அவன் வறிஞனாய் வரவேண்டியிருந்தால், கிழிந்த பிச்சைக்காரனுடையையே தரிப்பான்; ஸ்திரீ வேஷங்களிலும் அப்படியே. தற்காலத்தில் ஹரிச்சந்திரனாக ஸ்மாசனக் காட்சியில் வரவேண்டிய ஆக்டர்கள் விலையுயர்ந்த சம்கி (Chamki) உடுப்புகளையும், கம்பளத்திற்குப் பதிலாக சரிகைச் சால்வையும், காக்கும் மூங்கில் தடிக்குப் பதிலாக வெள்ளித்தடி யும் பூண்டு வருகின்றனரே, அம்மாதிரியான ஆபாசங்கள் அவர்களிடமில்லை . இப்பாரசீகக் கம்பெனியார் இந்தச் சீர்திருத்தம் கற்பித்தும் தென் இந்திய மேடையில், மேற்சொன்னபடியான ஆபாசங்கள் இன்னும் பரவி நிற்பது, வியசனிக்கத்தக்க விஷயம்.


இப்பாரசீகக் கம்பெனி தென் இந்தியாவுக்குக் கற்பித்த இன்னொரு விஷயம், மாறும்படியான காட்சிகளே (Transformation scenes). அரங்கத்தில் திடீரென்று ஒரு காட்சி மற்றொரு காட்சியாக மாறுவதேயாம்; ஒரு தர்பார் கானகமாகவோ, அல்லது ஒரு காடு ஒரு பூஞ்சோலையாகவோ, இப்படி ஒரு காட்சி மற்றொரு காட்சியாக க்ஷணநேரத்தில் மாறும்படியான சூட்சுமம் இவர்களிடமிருந்துதான் முதன் முதல் தென் இந்திய மேடையானது கற்றுக் கொண்டது என்று சொல்ல வேண்டும்.


இவர்களிடமிருந்து நாம் கற்றது இன்னொன்று ஆங்கிலேய பாலெட் (Ballet) என்று செல்லப்பட்ட பத்துப் பன்னிரண்டு சிறுவர்களோ சிறுமிகளோ நாடகமேடையில் நடனமாடுவதாம். கடைசியாக இவர்கள் செய்த இன்னொரு புது வழக்கம் என்னவெனில் பக்க வாத்தியக்காரர்களை