பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/251

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

நாடக மேடை நினைவுகள்


(Orchestra) நாடகமேடையில் பக்கப் படுதாவின் பக்கம் வைக்காமல், அரங்கத்திற்கெதிரில் சபையோர் முன்பாக வைத்ததேயாம். நாடக மேடைக்குள்ளிருந்தால் சாதாரணமாகப் பக்க வாத்திய மானது வெளியில் நன்றாய்க் கேட்பதில்லை. இப்படி வெளியிலிருக்கும்பொழுது சபையோருக்குப் பக்க வாத்தியம் நன்றாய்க் கேட்கும்படியானதாயது. இப்புது வழக்கத்தைச் சில கம்பெனியார் கைப்பற்றியபோதிலும், சிலர் பழைய மாமூலையே அனுசரிக்கின்றனர். இவ்விரண்டு வழக்கங்களையும் விட்டு ஆர்மோனியப் பெட்டியை மேடையின்மீது அரங்கத்திலேயே இப்பொழுது பல நாடகக் கம்பெனிகளில் வைப்பது எல்லாவிதத்திலும் ஆபாசமாம். இதைப்பற்றிப் பிறகு நான் கொஞ்சம் எழுத வேண்டி வரும்.

மேற்சொன்ன சீர்திருத்தங்களை உடையவர்களாயிருந்த படியாலும், பழைய கதைகளை விட்டு சற்றேறக்குறைய புது நாடகங்களையே இவர்கள் ஆடியபடியாலும், இக்கம்பெனி யின் ஆக்டர்களெல்லாம் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு ஒத்து உழைத்தபடியாலும், ஏறக்குறைய எல்லா ஆக்டர்களும் பாட்டிலும் நடிப்பதிலும் சாமர்த்திய முடையவர்களாயிருந்த படியாலும், இவர்கள் சென்னையில் நாடகாபிமானிகளையெல்லாம் சந்தோஷிப்பித்து ஏரளமான பொருள் சம்பாதித்தது ஆச்சரியமன்று.


இக்கம்பெனியினால் ஆடப்பட்ட எல்லா நாடகங்களையும், ஒன்றும் விடாது ஒரு முறையாவது பார்த்தேன்; சிலவற்றை இரண்டு மூன்று முறை பார்த்தேன். இதனால் இவர்கள் நாடகமாடும் ஒழுங்குகளெல்லாம் என் மனத்தில் நன்றாய்க் குடிகொள்ளவே, இவர்கள் நடிக்கும் நாடகம்போல் ஒன்றை எழுத வேண்டுமென்று உந்தப்பட்வனாய் “சத்ருஜித்” அல்லது பிளைண்ட் ஆம்பிஷன் (Blind Ambition) என்னும் நாடகத்தை இவ்வருஷம் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் எழுதி முடித்தேன். இந்நாடகமானது எங்கள் சபையோரால் அக்டோபர் மாதம் 9ஆம் தேதி ஆடப்பட்டது.

இந்நாடகத்தில் வீடு தீப்பற்றியெரியும் காட்சி, சிறைச் சாலையை உடைத்துக்கொண்டு வெளியே போகும் காட்சி, ப்ரவாகமாக ஓடும் ஆற்றில் நீந்திச் செல்லும் காட்சி, தூக்குமரக் காட்சி, மண்டபம் உடைந்து விழும் காட்சி முதலிய காட்சிகளை