பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

நாடக மேடை நினைவுகள்


இன்னாரென்றும் அவர் மறுநாள் என்னிடம் வந்து நான் எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, இனித் தங்கள் ஜபம் சாயாது என்று கண்டவராய்த் தன்னை அழைத்து, தன் பெயரை வெளியிடக் கூடாதென்று கட்டளையிட்டு, அக்காகிதங்கள் அகஸ்மாத்தாய் சாலைத் தெருவில் தனக்குக் கிடைத்ததாகச் சொல்லி என்னிடம் கொடுக்கும்படிச் செய்ததாக ஒப்புக் கொண்டான். நான் அவனுக்குக் கொடுத்த வாக்கின்படி அந் நண்பரை'ஏன் இப்படிச்செய்தாய்?’ என்று அவர் உயிருள்ளளவும் கேட்கவில்லை . அவர் மடிந்து போன பிறகும், இன்றளவில் இவ்விருத்தாந்தத்தை என் நண்பர்களுக்குப் பன்முறை கூறிய போதிலும், அவர் பெயரை மாத்திரம் வெளியிட்டவனன்று; ஆகவே இந் நாடக மேடை நினைவுகளிலும் அவரது பெயரை வெளியிடாததற்காக இதை வாசிக்கும் எனது நண்பர்கள் என்னை மன்னிப்பார்களாக.

நான் சில வருஷங்கள் நியாதிபதியாயிருந்திருக்கிறேன். ஆகவே இவ்விஷயத்தில் யார் யார்மீது என்ன குற்றம் என்று தீர்மானிக்க விரும்புகிறேன். இவ்விஷயத்தைக் குறித்து நிஷ்பட்சமாக யோசிக்குமிடத்து, முதலாவது என்மீது குற்றம் என்று ஒப்புக்கொள்ள வேண்டும். ஏனெனில், எனது நண்பர்களுள் பலர் என்னை வெறுக்கும்படியாக என்னிடம் ஏதாவது தப்பிதம் இருந்திருக்க வேண்டும். அக்காலத்தில் நான் என்ன குற்றஞ் செய்திருக்கக்கூடும் என்று யோசித்துப் பார்க்குமிடத்து, எனது ஆக்டர்களை நான் ஒத்திகைகளில் அதிகமாகக் கஷ்டப்படுத்தியிருக்க வேண்டுமெனத் தோற்றுகிறது; அவர்கள் மீதெல்லாம் அடிக்கடி அதிகக் கோபங் கொள்வது அக்காலத்தில் எனக்கு சுபாவமாக இருந்தது; ஒத்திகைக்கு வராவிட்டால் கோபங்கொள்வேன்; நாழிகை பொறுத்து வந்தால் கோபித்துக் கொள்வேன்; பாடம் சரியாகப் படிக்காவிட்டால் கோபித்துக் கொள்வேன்; எந்தச் சிறிய பிழைக்கும் அதிகக் கோபங்கொள்வேன். அப்பிழைகளையெல்லாம் பொறுக்க வேண்டுமென்பதல்ல; பிழைகளை எடுத்துக் காட்டுவதில் சாந்தமாயும் நியாயமாயும் காட்டலாமல்லவா? அந்த நற்குணம் என்னிடம் அப்பொழுது சிறிதும் இல்லாதிருந்தது. இதனால் எனது நண்பர்கள் பலருக்கு நான் மனவருத்தம் உண்டுபண்ணியிருக்க வேண்டுமென்பது திண்ணம்; இரண்டாவது, இந்த மேற்சொன்ன குற்றத்தை நான்