பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

241


ஒப்புக்கொண்டபோதிலும் எனது நண்பர்கள் அதை எனக்கு வெளிப்படையாய்க் கூறி, எனக்குப் புத்திமதி கூறாது, நாகடத்தில் ஒருங்கு சேர்ந்து நாங்கள் ஆடமாட்டோம் என்று கூறியது அவர்கள் மீது குற்றமாம்; அப்படிச் செய்திருப்பார்களாயின் நான் என் குற்றத்தை ஒப்புக்கொண்டு, அவர்கள் மன்னிப்பைக் கேட்டிருப்பேன் என்று நினைக்கிறேன்; மூன்றாவது, எனது நண்பர்கள் அப்படி மாட்டோம் என்று தங்கள் பாகங்களை என்னிடம் கொடுத்த பொழுது, நான் அவர்களை ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டிருக்க வேண்டும். இது என் குற்றமாம்; அவர்களாகக் காரணம் கூறாமலிருக்கும்பொழுது நாம் ஏன் அவர்களைக் கேட்க வேண்டும் என்ற மனோபாவம் எனக்கு வந்திருக்கக் கூடாது. நான்காவது, அப்படி நான் கேளாமற் போனதிலும், சபையின் நன்மையைக் கருதாது, என் நாடகக் காகிதங்களை அபகரித்தது அவர்கள் தவறாகும்.

இனி இந்த சத்ருஜித் நாடகம் முதன் முறை நடிக்கப் பட்டதைப்பற்றிக் கொஞ்சம் எழுதுகிறேன். இந்நாடகத்தில் முக்கிய ஸ்திரீ பாகங்கள் இரண்டாம். இந்திரசேனை, சதீமணி. இந்திரசேனையின் பாகம் அ. கிருஷ்ணசாமி ஐயருக்கு முதலில் கொடுத்திருந்தது. அவர் வேண்டாமென்று திருப்பிவிடவே, சாது கணபதி பந்துலு அவர்களுக்குக் கொடுத்தேன்; இவர் பாடாவிட்டாலும், தன் வசனத்தை நன்றாய் நடித்தார். இரண்டாவது ஸ்திரீ பாகமாகிய சதீமணியின் வேஷத்தில் எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு மிகவும் நன்றாய் நடித்தார் என்று அனைவரும் சொல்லக் கேட்டேன். சோக பாகத்தில் இவருக்கு நன்றாய் நடிக்கும் சக்தியுண்டென்பதை இந்நாடகத்தில்தான் கண்டேன். ஹாஸ்ய பாகத்தில் ச. ராஜகணபதி முதலியார் கஜவதனனாக மிகவும் நன்றாய் நடித்தார். இந்தப் பாத்திரம் இவருக்கென்றே எழுதப்பட்டதென்பதை, கஜவ தனன் என்கிற பெயர் அப்பாத்திரத்திற்கிட்டதனாலேயே எனது நண்பர்கள் அறிவார்கள். இவருடன் கூட வரும் விசாகதத்தன், விதேகதத்தன் பாத்திரங்கள் முதலில் எம். துரைசாமி ஐயங்காருக்கும், ஷண்முகப்பிள்ளைக்கும் கொடுத்திருந்தது. அவர்கள் வேண்டாமென்று திருப்பிவிடவே, ஒன்றை குப்புசாமி முதலியார் என்பவருக்குக் கொடுத்தேன். மற்றொன்றிற்குத் தகுந்த ஆசாமி யாரும் கிடைக்காது நான்