பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

257


நினைக்கிறேன். இவ்வருஷம் நேரிட்ட ஒரு துக்ககரமான சம்பவம் என்னவென்றால், எனது பழைய நண்பரும் எங்கள் சபைக்குப் பல வருடங்களாகக் காரியதரிசியாகவுமிருந்த ஊ. முத்துக்குமாரசாமி செட்டியார் இறந்ததேயாம்.


பதினைந்தாம் அத்தியாயம்


தற்கப்புறம் 1902ஆம் வருஷத்தில் ‘நான் விரும்பிய விதமே’ என்னும் நாடகத்தை எழுதினேன். இது ஷேக்ஸ்பியர் மகாகவி ஆங்கிலத்தில் ‘ஆஸ் யூ லைக் இட்’ (As you like it) என்னும் பெயர் வைத்து எழுதிய ஆங்கில நாடகத்தின் தமிழ் அமைப்பாம்

இம் மகா நாடகக் கவியின் ஆங்கில நாடகங்களுள் சிலவற்றைத் தமிழில் அமைத்ததில் இது முதலானதாகையால், இதைப் பற்றிக் கொஞ்சம் விஸ்தாரமாய் எழுத விரும்புகிறேன்.

ஒரு பாஷையிலிருந்து மற்றொரு பாஷைக்கு யாதானு மொரு விஷயத்தை மொழி பெயர்ப்பதென்றால் எளிதல்ல; அதிலும் திராவிட பாஷைக்கும் ஆங்கிலத்திற்கும் கொஞ்ச மேனும் சம்பந்தம் கிடையாது; மேலும் ஒவ்வொரு பாஷைக்கும் ஒரு விதமான நடை அல்லது போக்கு (Idiom) உண்டு; அதை மற்றொரு பாஷையின் நடையல்லது போக்குக்குத் திருப்புவதென்றால் கடினமாம். சாதாரண ஆங்கிலேய வசனத்தைத் தமிழில் மொழி பெயர்ப்ப தென்றாலே இவ்வளவு கஷ்டமாயிருக்க, உலகமெங்கும் பிரசித்திபெற்ற மகா நாடகக் கவியாகிய ஷேக்ஸ்பியருடைய நாடகங்களைத் தமிழில் எழுதுவதென்றால் மிகவும் அசாத்திய மான காரியம் என்பதை அறிந்துள்ளேன். அப்படியிருக்க, இக்கஷ்டமான வேலையில் கையிட்டுக் கொண்டதற்குக் காரணம் அடியில் வருமாறு:-

ஒரு நாள் எனது பால்ய நண்பராகிய வாமன்பாய் என்ப வரும் நானும் ஏதோ நாடக விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த பொழுது, “நாடக மேடையில் நீ எந்தப் பாத்திரம் நன்றாய் ஆடினாலும் ஆடலாம்; உன்னால் ஷேக்ஸ்பியரின்