பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

265





மாற்றிக்கொள்வார். இவ்விஷயத்தில் இவரைவிட மேம்பட்ட வர்களை நான் தென் இந்தியாவில் கண்டதில்லை. சகுந்தலை நாகடத்தில் ஒரு முறை, தான் ஒரே இரவில் பதினொரு நாடகப் பாத்திரங்களாக மேடையில் தோன்றியதாக என்னிடம் ஒருமுறை கூறியுள்ளார். தான் ஒரு வேஷம் போட்டுக் கொண்டாலும் சரி, மற்றவர்களுக்கு ஒரு வேஷம் போடுவ தென்றாலும் சரி, அது இப்படியிருக்க வேண்டுமென்று நாடக தினத்திற்கு நான்கைந்து நாட்கள் முன்பாகவே யோசித்து, அதற்கு வேண்டிய சாமக்கிரியைகளை யெல்லாம் சேர்த்துக்கொண்டு, ஒரு சிறு விஷயமும் விடாது, மிகுந்த சிரமம் எடுத்துக்கொண்டு அதற்குத் தக்கப்படி வேஷம் போடுவார். ஒருமுறை யானைக் காலையுடைய ஒரு பறையனாக வேஷம் போடவேண்டி, அதற்காக அவர் எடுத்துக்கொண்ட சிரமம் எனக்குத் தெரியும். மற்றொரு முறை நந்தனார் சரித்திரமாடிய பொழுது, அதில் வந்த பத்துப் பன்னிரண்டு பறையர்களுக்கும், ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான பற வேஷம் போட்டனுப் பினார்! விசித்திரமான வேஷங்கள் போடுவதில் இவருக்கு மிகவும் பிரியம். குருடன், முடவன், குஷ்டரோகி, நோயாளி, கிழவன், கிழவி முதலிய வேடங்கள் புனைவதில் இவருக்கு நிகரானவர்களை நான் என் ஆயுளில் இதுவரையில் கண்ட தில்லை; இனியும் காணப்போகிறதில்லை என்பது என் துணிபு.

இவர்தான் முதல் முதல், எங்கள் சபையில், நான் முன்னே உரைத்தபடி அப்பு உபயோகித்த அரிதாரம், செந்தூரம், முதலிய பூர்விக வர்ணங்களை ஒழித்து, கிரீஸ் பெயின்ட் (Grease Paint), பேர்ல் கிரீம் (Pearl Cream), லிப்சால்வ் (Lipsalve), ஐபுரோ பென்சில் (Eyebrow Pencil) முதலிய நவநாகரிகமானவைகளை உபயோகத்திற்குக் கொண்டு வந்தவர். எங்கள் சபையிலும் இன்னும் இதர சபைகளிலும் கிரீன்ரூம் டைரக்டர்களாக வந்தவர்களெல்லாம், இவரிடமிருந்து கற்றுக் கொண்டவர்களே என்று சொல்வது கொஞ்சமேனும் அதிகரித்துக் கூறுவதாகாது. வர்ணம் தீட்டுவதிலும், வேஷம் போடுவதிலும் புதிது புதிதாய் ஏதாவது யுக்தி செய்துகொண்டே இருப்பார்; இவரது வாழ்நாட்களில் பெரும்பாகம் இச் சபைக்கே செலவிட்டனர் என்று கூறுவது மிகையாகாது. இவரிடமிருந்து ஒரு முக்கிய மான-சாதாரணமாகக் கிடைத்தற்கரிய குணம், என்னவென்றால், தான் கற்றதைத் தன்னிடம் அன்புள்ள தன் சிஷ்யர் களுக்குக் கள்ளம் கபடின்றிக் கற்பித்ததேயாம்.