பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266

நாடக மேடை நினைவுகள்


இவருக்கு நான் முக்கியமான நன்றியறிதல் பாராட்ட வேண்டியவனாயிருக்கிறேன். என்ன காரணம் என்றால், என் இளமை நீங்கி, எனக்கு வயதாக ஆக, நரைதிரைகளை மறைத்து வர்ணம் எழுதி, நாடக மேடையின் பேரில் என்னை இள வயதுடையவனைப்போல் நடிக்கச் செய்தது இவரே. சாதாரண வேடங்களில் வருவதற்கே இவர் எனக்காக ஒரு மணி சாவகாசத்திற்குக் குறையாமல் கஷ்டம் எடுத்துக்கொள்வார். “வள்ளி மணம்” என்னும் நாடகத்தில் சுப்பிரமணியராக நான் ஆட வேண்டியிருந்தால் குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் என் ஒருத்தனுக்காகச் செலவழிப்பார்!


இவர் தமிழ்-தெலுங்கு நாடகங்களில் நடித்ததுமன்றி, மேற்சொன்னபடி ஆக்டர்களுக்கு வேஷம் போடுவதில் உதவியதுமன்றி, மற்றொருவிதத்திலும் எங்கள் சபைக்கு இவர் செய்த உதவிக்காக நாங்கள் இவருக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். அதாவது, இவர் தெலுங்கு பாஷையில் எங்கள் சபைக்காக இயற்றிய நாடகங்களே; அவை “நந்தனார்”, “விதிலேக வயித்தியுடு”, “ராணிசம்யுக்தா”, “பாரிஜாத புஷ்பஹரணம்”, “மாம்ஜித்சிங்” முதலியனவாம். இவற்று ளெல்லாம் மிகச் சிறந்தது தெலுங்கு நந்தனாரே. கோபால கிருஷ்ண பாரதியார் தமிழில் மிக அழகாய் எழுதிய பாட்டுகளையெல்லாம் அப்படியே தெலுங்கில் மொழி பெயர்த்திருப்பது மிகவும் மெச்சத் தக்கதாம். இவ்வாறு பல வகையிலும் எங்கள் சபைக்கு உதவி புரிந்த இவரது படம் ஒன்றை இவர் காலகதியடைந்த பிறகு, எங்கள் சபையில் இவர் ஞாபகார்த்த மாக வைத்திருக்கிறோம். இத்தகைய குணம் வாய்ந்தவர் இந் நாடகத்தில் அச்சுதனாகிய விதூஷகனாக மிகவும் விமரிசையாக நடித்தது ஓர் ஆச்சரியமன்று.


இந்நாடகத்தில் என் பழைய சிநேகிதர் ராஜகணபதி முதலியார் லாவண்யன், நந்தக்கோனான், வில்லியன் எனும் மூன்று வேடங்கள் பூண்டனர். பி. கோபாலசாமி சாரளனாகவும், செல்வக்கோனானாகவும் நடித்தார். இந் நாடகத்தில் ஒரு முக்கியமான சிறப்பென்னவென்றால், ஒவ்வொரு ஆக்டரும் தான் மேற்கொண்ட பாத்திரத்திற்குத் தக்கபடி நடித்துப் பெயர் பெற்றதேயாம். இந் நாடகம் ஜனங்களுக்குத் திருப்தியைத் தந்து, இது சில வருடங்களுக்குள் பன்முறை நடிக்கப்பட்டதற்குக் காரணம், இவ்வாறு எல்லா ஆக்டர்களும் நன்றாய் நடித்ததேயெனக் கருதுகிறேன். சில நாடகங்களில்